Plastic Ban in Kodaikanal - சுற்றுலா பயணிகள் இனி கொடைக்கானலுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துச் சென்றால் பெர்மிட் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலின் பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஏற்கனவே அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, பொதுவாக கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருள்களை மலைகளின் மீதே சிதறி விட்டு செல்வதால் அங்கு இருக்கும் சூழல் என்பது வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகிறது.
அது மட்டும் அல்லாமல் ஒரு மாதத்திற்கே டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள் சேருவதால், அங்கு இருக்கும் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு அது அசாத்திய சூழலை ஏற்படுத்துகிறது, இவ்வாறான சூழலை தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே தமிழக அரசு கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்ல தடை விதித்து இருந்தது,
அதை மீறியும் ஒரு சில பயணிகள் மறைத்து வைத்து பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு சென்று வந்தனர், கொடைக்கானலில் இருக்கும் ஒரு சில கடைகளும் தடைகளை மீறி சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை விநியோகித்து வந்தனர், இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த கொடைக்கானல் சுற்றுலா நிர்வாகம் பிளாஸ்டிக் விநியோகித்த கடைகளுக்கு சீல் வைத்தது.
பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு சென்ற உபயோகித்த பயணிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது, இது போக இனிமேல் சுற்றுலாப் பயணிகள் 5 லிட்டருக்கும் குறைவான ஏதாவது பிளாஸ்டிக் பாட்டில்களை கார்களின் கைகளில் எடுத்துச் சென்றால் அவர்கள் எவ்வளவு செலவழித்து எங்கு இருந்து வந்தாலும் அவர்களின் அனுமதி முழுமையாக ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்து இருக்கிறார்.