Japan Train Delay Refund Policy - ஜப்பான் நகரில் ரயில் ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் கூட பயணிகள் டிக்கெட்டுக்கான காசை திரும்ப பெற முடியும் என்கிறார்களே அதன் உண்மைதன்மை குறித்து பார்க்கலாம்.
ஜப்பான் என்றாலே புதுமைகளின் நாடு, புது புது தயாரிப்புகளின் நாடு, தொழில் ஒழுக்கம் மிகுந்த நாடு, உழைப்பாளிகள் மிகுந்த நாடு என அடுக்கிக் கொண்டே போகலாம், அந்த வகையில் இணையத்தில் ஒரு சம்பவம் அது கிட்டத்தட்ட ஒரு 6 வருடங்களுக்கு முன்பாக ஜப்பானில் நடந்தது, அதாவது பயணிகள் அதிகமாக ஏறும் ஜப்பான் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் 35 வினாடி தாமதமாக வருகிறது.
அதற்கு அந்த ரயிலின் பைலட் அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருகிறார், அந்த ரயிலில் பயணம் செய்த அனைவருக்கும், அந்த ரயிலுக்காக காத்திருந்த அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட்டுக்கான காசை ஜப்பான் ரயில்வே நிர்வாகம் திரும்பகொடுத்து இருக்கிறது, இந்த சம்பவம் இந்தியாவில் வேண்டுமானால் விநோதமாக தெரியலாம், ஆனால் ஜப்பானில் இது நார்மலான விஷயமாம்.
ஜப்பானை பொறுத்தமட்டில் தொழில் ஒழுக்கம் மிகுந்த நாடு, அவர்கள் ஒவ்வொரு நொடியையும் பொற்காசுகளாக வைரங்களாக வைடூரியங்களாக பார்க்க தெரிந்தவர்கள், அதனால் தான் ரயில் டைமிங்கிற்கு கூட இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், நீங்கள் பயணிக்க வேண்டிய ரயில் ஒரு நொடி தாமதம் ஆனால் கூட நேரடியாக கவுண்டருக்கு சென்று காசை திரும்ப பெற முடியும்.
அதுமட்டும் அல்லாது பயணிகள் ரயிலுக்கு தாமதமாக வந்தாலும் கூட எடுத்த டிக்கெட்டை ஸ்டேசன்களில் காண்பித்து டிக்கெட்டுக்கு செலுத்தியதில் பாதி தொகையை திரும்பி பெற முடியும், ஏன் ஜப்பான் முன்னேறிக் கொண்டே இருக்கிறது என்பதற்கு பெரிய காரணம் ஏதும் இல்லை, அவர்களது தொழில் ஒழுக்கம் அது தான் அவர்களை வளர்ந்த நாடாக முன்னேற்றிக் கொண்டே இருக்கிறது.