• India
```

இனி ஜம்மு-காஷ்மீருக்கு எளிதாக போகலாம்.. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் இயக்கம்!!

Jammu Kashmir Metro Train

By Dhiviyaraj

Published on:  2025-01-21 22:59:31  |    122

இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதுவரை 66 வழித்தடங்களில் இந்த உயர்தர ரயில்கள் இயக்கத்தில் உள்ளன.

இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதுவரை 66 வழித்தடங்களில் இந்த உயர்தர ரயில்கள் இயக்கத்தில் உள்ளன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரிலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கம் தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. ஸ்ரீ மாதா வைஷ்ணோதேவி கத்ரா (SVDK) ரயில் நிலையத்திலிருந்து ஸ்ரீநகர் வரை புதிய வந்தே பாரத் சேவை தொடங்கப்படும்.

கடுமையான குளிரை எதிர்கொள்ள புதிய வடிவமைப்பு செய்து வருகின்றனர். இந்த ட்ரைன் அதிகபட்ச வேகம் – 160 கிமீ/மணிக்கு இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மலைப்பாங்கான பாதை காரணமாக 85 கிமீ/மணிக்கு மட்டுமே இயக்கம்

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு செய்த பின்னர், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கத் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.