• India
```

உக்ரைன் மீண்டும் பழைய பொருளாதார நிலைக்கு திரும்ப இன்னும் 70 வருடங்கள் ஆகலாம்...!

It will Take Another 70 Years For Ukraine To Restores Its Economy

By Ramesh

Published on:  2024-11-20 17:40:27  |    173

It will Take Another 70 Years For Ukraine To Restores Its Economy - போரினால் சிதைந்து இருக்கும் உக்ரைன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் 70 வருடங்கள் ஆகலாம் என பொருளாதர வல்லுநனர்கள் கணித்து வருகின்றனர்.

It will Take Another 70 Years For Ukraine To Restores Its Economy - ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் என்பது கிட்டதட்ட 2014 ஆம் ஆண்டு துவங்கியது, அப்போது துவங்கிய சிறு பொறி, 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் பற்றிக் கொண்டது, தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டு இருக்கும் இந்த போரால் இரண்டு நாட்டின் பொருளாதாரங்களுக்கும் பெரிதாக முடங்கி கிடக்கின்றன.

அதிலும் உக்ரைனின் நிலைமை மிக மிக மோசம், ஐநா மனித உரிமை அமைப்பின் புள்ளி விவரங்கள் படி கிட்டதட்ட இந்த போரில் 11,473 பேர் உயிர் இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது, 24,614 பேர் காயம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது, இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை, இதை விட அதிகமாகவும் இழப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.



இன்றோடு ஆயிரம் நாட்கள் போர் நடந்து இருக்கும் நிலையில், உக்ரைனின் அமைப்பில் கிட்டதட்ட 687 பில்லியன் டாலர் அமைப்புகளை ரஷ்யாவின் ஆயுதங்கள் சீர்குலைத்து இருக்கின்றன, உக்ரைனின் GDP மட்டும் கிட்டதட்ட 33% இந்த போரால் சரிந்து இருக்கிறது, வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் மட்டும் Defence க்கு செலவிட்டு வந்த உக்ரைன் தற்போது 20 பில்லியன் டாலர் செலவிட்டு வருகிறது.

தற்போது வேறு உக்ரைன், அமெரிக்காவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை பயன்படுத்தியதால், ரஷ்யா ஆனது உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது, இதனால் உக்ரைன் இன்னும் பெரிய பாதிப்பை சந்திக்க கூடும், தற்போது இருக்கும் உக்ரைனின் நிலையை மீட்கவே உக்ரைனுக்கு இன்னும் 70 வருடங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

" இதில் வேறு அணு ஆயுதங்கள் உக்ரைனின் மீது பயன்படுத்தப்பட்டால் உக்ரைன் அதில் இருந்து மீள்வதே கடினம் ஆகி விடும் என கூறப்படுகிறது "