Israel Hitech Farming - இஸ்ரேல், நன்னீர் என்பது இங்கு பார்க்க முடியாத அரிய பொருள், ஆனாலும் இஸ்ரேலுக்கு விவசாயத்தின் தேவை நன்கு புரிந்து இருந்தது, எப்படியேனு விவசாயத்தை தக்க வைக்க வேண்டும் பெருக்க வேண்டும் என இஸ்ரேல் யோசித்துக் கொண்டே இருந்ததன் விளைவு அன்று 75,000 ஏக்கர்களில் விவசாயம் செய்தவர்கள் இன்று 5 இலட்சம் ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர்.
இஸ்ரேலை பொறுத்தமட்டில் து ஒரு வெப்ப மண்டல பாலைவனம் மற்றும் மலைப் பகுதிகள் சூழந்த நாடு, அங்கு விவசாயம் அவ்வளவாக சாத்தியமில்லை, இஸ்ரேலில் சராசரி மழைப்பொழிவு என்பது வருடத்திற்கு 550 மிமீ அல்லது அதற்கும் குறைவாக தான் இருக்கும், அந்த வகையில் இஸ்ரேல் கிடைக்கும் நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் 77% மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறது,
சொட்டு நீர் பாசனம் என்பது இன்று உலகளாவிய அளவில் இருந்தாலும் கூட, இஸ்ரேல் தான் அதை நவீனப்படுத்தியது, ஒவ்வொரு தாவரத்திற்கும், ஒவ்வொரு மரத்திற்கும் எவ்வளவு நீர் தேவைப்படும் என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ப நேரடியாக வேர்களுக்கு நீரைக் கொடுத்து நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் இஸ்ரேல் விவசாயத்தில் ஒரு புதிய புரட்சியே ஏற்படுத்தி வருகிறது.
இஸ்ரேலில் இருக்கும் விவசாய தொழிநுட்பங்களை நுணுக்கமாக கற்க, இந்திய விவசாயிகள் உட்பட பல நாடுகளின் விவசாயிகள், அரசு சார்பிலேயே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர், தண்ணீர் இல்லாமல் விவசாயம், சொட்டு நீர் பாசனம், கடல் நீரை சுத்திகரித்து விவசாயம், குடில் விவசாயம் என அனைத்து விவசாயங்களிலும் தன்னை நிலை நாட்டி வருகிறது இஸ்ரேல்.
" விவசாயத்திற்கு ஏற்ப இயற்கையையும் கட்டமைப்பதில் இஸ்ரேல் தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறது, வீட்டுக்கு வீடு தேனீகள் வளர்ப்பு, செயற்கை மகரந்த சேர்க்கை, அட்வான்ஸ்டு AI பயோ டெக்னாலஜி என விவசாய விரிவாக்கத்துக்கு தொடர்ந்து இஸ்ரேல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது "