IPL Auction 2025 Highlights - சவூதியில் ஜெட்டா நகரில் நடைபெற்ற IPL Auction 2025 யின் முதல் நாள் ஏலம் முடிவடைந்து இருக்கிறது, சென்னை அணி எந்த எந்த வீரர்களை எடுத்து இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
IPL Auction 2025 Highlights - IPL Auction 2025 யின் முதல் நாள் ஏலம் முடிவடைந்து இருக்கிறது, முதல் நாள் ஏலத்தில் 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு இருக்கின்றனர், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடிக்கு LSG அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார், அதற்கு அடுத்தபடியாக ஸ்ரேயஸ் ஐயர் 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார், வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியால் 23.75 கோடிக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை அணியை பொறுத்த மட்டில் 7 வீரர்களை முதல் நாள் ஏலத்தில் எடுத்து இருக்கின்றனர், ருதுராஜ், எம் எஸ் தோனி, ஷிவம் டுபே, ரவீந்திர ஜடெஜா, மதீஷா பதிரானா உள்ளிட்ட ஐந்து வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டு இருந்தது, தற்போது முதல் நாள் ஏலத்தில் 7 வீரர்களை இணைத்து இருப்பதன் மூலம் தற்போது 12 வீரர்கள் CSK வில் இருக்கின்றனர்.
சரி யார் யாரை CSK என்ன விலைக்கு எடுத்து இருக்கிறது?
நூர் அஹமது (10 கோடி), ரவிச்சந்திரன் அஷ்வின் (9.75 கோடி), டெவான் கான்வே (6.25 கோடி), கலீல் அஹமது (4.80 கோடி), ரச்சின் ரவீந்திரா (4 கோடி), ராகுல் த்ரிபாதி (3.40 கோடி), விஜய் ஷங்கர் (1.20 கோடி) ஆகிய வீரர்கள் முதல் நாள் ஏலத்தில் சென்னை அணியில் எடுக்கப்பட்டு இருக்கின்றனர், ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி இருக்கிறார்.
சென்னை அணி ஏலத்தில் இதுவரை 39.40 கோடி வீரர்களை எடுக்க செலவிட்டு இருக்கிறது, இன்னும் மீதம் 15.60 கோடி மிச்சம் இருக்கிறது, நட்சத்திர வீரர்களான ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர் உள்ளிட்டோர்கள் Unsold ஆகி இருப்பது ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, ஜோஸ் பட்லருக்கு சென்னை அணி மறுஏலத்தில் குறி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.