• India
```

அமெரிக்க புலன் விசாரணை அமைப்பின் இயக்குநராக...இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு...!

Indian American Named As Next FBI Director

By Ramesh

Published on:  2024-12-02 18:57:07  |    149

Indian American Named As Next FBI Director - அமெரிக்க புலன் விசாரணை கூட்டமைப்பு பணியகத்தின் (FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அதிபர் ட்ரம்ப் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.

Indian American Named As Next FBI Director - அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயல்படும் புலன் விசாரணை அமைப்பான FBI, நாட்டின் முக்கிய குற்றங்களை விசாரித்து அறிக்கைகளை சமர்ப்பிக்கும் ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது, 200 க்கும் மேற்பட்ட குற்றங்களுக்கான விசாரணைகள் அமெரிக்காவில் FBI மூலம் விசாரிக்கப்படுகின்றன, இது ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு சங்கத்தின் ஒரு அங்கமாகவும் விளங்கி வருகிறது. 

உலகளாவிய அளவில் தலை சிறந்த புலனாய்வு அமைப்பாக பார்க்கப்படும் அமெரிக்காவின் FBI அமைப்பிற்கு ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் படேல் என்பவரை இயக்குநராக தேர்வு செய்து, அதிபர் ட்ரம்ப் அவர்கள் பரிந்துரை செய்து இருக்கிறார், ட்ரம்ப் அதிபர் ஆனதில் இருந்து அமெரிக்காவின் பல முக்கிய பொறுப்புகளில் பல இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.



தற்போது FBI இயக்குநராக இருக்கும் கிறிஸ்டோபர் ஃவ்ரே பதவிக்காலம் முடிந்ததும், அடுத்த இயக்குநராக காஷ்யப் படேல் செயல்படுவார் என தெரிகிறது, காஷ்யப் படேல் இதற்கு முன்பாக தேசிய பாதுகாப்பு அமைப்பின் உதவியாளராக பணி புரிந்து இருக்கிறார், வழக்கறிஞராக பல காலம் பணி புரிந்து இருக்கிறார், ஊழல், தீவிரவாதம் என பல முக்கிய குற்றங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

44 வயது ஆகும் காஷ்யப் படேல், நாட்டின் பாதுகாப்பிற்காகவும், நாட்டில் நடக்கும் ஊழலை வெளிக்கொணர பல முயற்சிகள் செய்து இருப்பதாகவும், மூடி மறைக்கப்பட்ட பல நீதியை, பல்வேறு முறை வெளிக் கொண்டு இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் காஷ்யப் அவர்களை பாராட்டி இருக்கிறார், இத்தகைய காரணங்களுக்காகவே அவர் FBI இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு இருப்பதாக ட்ரம்ப் அவர்கள் அறிவித்து இருக்கிறார்.