• India
```

வாழ்க்கை, வேலை சமநிலை குறித்து பதிவிட்ட...இந்திய அமெரிக்க ஊழியருக்கு மரண அச்சுறுத்தல்கள்...!

Indian American CEO Received Death Threats

By Ramesh

Published on:  2024-11-18 22:21:35  |    207

Indian American CEO Received Death Threats - சமூக வலைதளங்களில் வாழ்க்கை வேலை சமநிலை குறித்து பதிவிட்ட இந்திய அமெரிக்க CEO ஒருவருக்கு மெசேஜ்களில் மரண அச்சுறுத்தல்கள் வருவதாக அவர் பதிவிட்டு இருக்கிறார்.

Indian American CEO Received Death Threats - பொதுவாக பிரபல நிறுவனங்கள் தலைமைகள் தொடர்ந்து வேலை வாழ்க்கை சமநிலைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர், அதே சமயம் ஊழியர்கள் வேலை வாழ்க்கை சமநிலை வேண்டும் என்று தொடர்ந்து அறிவுருத்தி வருகின்றனர், கடந்த 4 வருடங்களாக இந்த சமநிலை விவாதங்கள் தொடர்ந்து இணையதளங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

சமீபத்தில் கூட இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்கள் வேலை வாழ்க்கை சமநிலை என்பது ஒரு நிறுவனத்திற்கு சரிவராது, அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வேலை வாழ்க்கை சமநிலை என்பதெல்லாம் ஒத்தே வராது என கூறி இருந்தார், ஒரு சிலர் அதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தாலும் கூட பெரும்பாலானோர் எதிர்ப்பு தான் தெரிவித்து இருந்தனர்.



இந்த நிலையில் அமெரிக்காவில் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணி புரிந்து வரும் தக்‌ஷ் குப்தா என்பவர், ‘நாங்கள் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போதே எங்கள் நிறுவனத்தில், வாரத்திற்கு 84 மணி நேரத்திற்கு மேல் வேலை இருக்கும் என கூறி விடுகிறோம், சில சமயங்களில் சனி ஞாயிறு கூட பணி புரிவோம், அதற்கு ஒத்து போவர்களை தான் பணியில் எடுக்கிறோம்’ என ஒரு பதிவை இட்டு இருந்தார்.

அது ஒரு சாதாரண பதிவாக பார்க்கப்பட்டாலம் ஊழியர்கள் பலரும் அவரின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், ஆனாலும் கூட அசைந்து கொடுக்காத தக்‌ஷ் குப்தா, தான் கூறியதில் தொடர்ந்து உறுதியாக இருந்தார், தொடர்ந்து வேலை வாழ்க்கை சமநிலை குறித்த விவாதங்கள் இணையத்தில் அனல் பறக்க துவங்கி இருக்கின்றன. இது நிச்சயம் ஒரு ஊழியர்கள் மற்றும் தலைமை இடையிலான போர் தான்.