• India

இந்தியாவில் பதிவானது...முதல் HMPV வைரஸ் தொற்று...மேலும் அதிகரிக்குமோ என மக்கள் அச்சம்...!

India Reports First HMPV

By Ramesh

Published on:  2025-01-06 19:53:57  |    98

India Reports First HMPV - கோவிட் 19 ஓய்ந்து 5 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் தற்போது சீனாவை மெட்டா நியூமோ என்ற புதிய வைரஸ் அச்சுறுத்தி வருகிறது, மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை சீனாவில் உருவாகி இருப்பதால், பெரும்பாலான  சீன மருத்துவமனைகள் மக்கள் அலையில் மூழ்கி கிடக்கிறது, காற்றில் எளிதாக பரவக்கூடிய வைரஸ் தற்போது தொற்று நோயாக உருவெடுத்து இருக்கிறதாம்.

பொதுவாக இந்த மெட்டா நியூமோ எனப்படும் இந்த HMPV வைரஸ் பாதித்தவர்களுக்கு முதலில் ஜலதோசம், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக தகவல், நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் எளிதாக இந்நோய் பரவக்கூடும் எனவும் ஏற்கனவே ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் தகவல்.



இந்த நிலையில் இந்தியாவில் இந்த கொடிய HMPV வைரஸ்சின் முதல் தொற்று கர்நாடகா மாநிலத்தில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, மொத்தம் இரண்டு குழந்தைகளுக்கு பெங்களுருவில் பதிவாகி இருக்கிறதாம், ஒரு குழந்தையின் வயது 3 மாதம் எனவும்ம், இன்னொரு குழந்தையின் வயது 8 மாதம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இரண்டு குழந்தைகளும் தேறி வருகின்றனராம்.

இது குறித்து இந்திய மருத்துவ அமைச்சகம் கூறுகையில், 'இந்தியாவில் இது முதல் HMPV என்பது ஒரு தவறான தகவல், இந்த HMPV வைரஸ் என்பது ஏற்கனவே இருக்கும் ஒரு வைரஸ் தொற்று தான், புதிய வைரஸ் எல்லாம் இல்லை, ஆதலால் தொற்று குறித்து கவலைப் பட தேவையில்லை, இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்படும்' எனவும் கூறி இருக்கிறது.