• India
```

சிபில் ஸ்கோர் தெருஞ்சுக்கணுமா ? அப்போ கூகுள் பே இருந்தால் போதும் !

How To Increase Cibil Score in Tamil​ | Business News In Tamil

Cibil Score in Tamil​ -கூகுள் பே மூலம் எளிதில் மற்றும் கட்டணமின்றி சிபில் ஸ்கோர்களை அறிந்து கொள்ளலாம், அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கடன் வழங்கும் போது, ஒருவரின் சிபில் ஸ்கோர் மிக முக்கியமானது. இதனை மையமாகக் கொண்டு, பயனர்கள் கூகுள் பே மூலம் எளிதில் எந்தவித கட்டணமின்றி சிபில் ஸ்கோர்களை அறிந்து கொள்ள முடிகின்றன.

வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பிற கடன்களுக்கு தேவையான சிபில் ஸ்கோர் மிக அவசியமானது. மேலும், கடன் தவணைகளை தாமதமாக செலுத்தும் விவரங்களையும் கூகுள் பே வழங்குகிறது. இதுவரை 5 கோடி இந்தியர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி உள்ளனர்.


கூகுள் பே மூலம் சிபில் ஸ்கோர் செக் செய்வது பற்றி பார்க்கலாம்,

1. மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்யவும்.

2. பிறகு, முகப்பு பக்கத்தில் 'மேனேஜ் யுவர் மனி' பகுதியில் உள்ள 'Check your CIBIL score for free' என்பதை க்ளிக் செய்யவும்.

3.அதன் பின்பு, தேவையான ஆவணங்களில் உங்கள் பெயரை உள்ளிடவும்.

4.பிறகு, குறுகிய நேரத்தில், உங்கள் சிபில் ஸ்கோர் கிடைத்துவிடும்.

அதாவது, கூகுள் பே, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பான் கார்டு எண் போன்ற தகவல்களைப் பயன்படுத்தி, சிபில் ஸ்கோரை எளிதில் அளிக்கிறது. இது TransUnion CIBIL நிறுவனத்தின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.