How a Trump Victory Could Affect India - அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு எதிராக வெற்று பெற்று இருக்கும் டிரம்ப்பின் வெற்றியால் இந்திய பொருளாதாரத்திற்கும், இந்தியர்களுக்கும் என்ன பாதிப்பு என்பது குறித்து பார்க்கலாம்.
How a Trump Victory Could Affect India - அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் 538 எலக்டோரல் ஓட்டுகளில், டொனால்டு டிரம்ப் 277 இடங்களை கைப்பற்றி வெள்ளைமாளிகையை மீண்டும் தன்வசப்படுத்தி இருக்கிறார், எதிர்த்து போட்டி இட்ட கமலா ஹாரிஸ் 3.5 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறார், பெரிய பெரிய தலைவர்கள், ஹாலிவுட் ஹீரோக்கள் சப்போர்ட் இருந்தும் கமலா ஹாரிஸ் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கிறார்.
பொதுவாக டிரம்பை பொறுத்தவரை ஆளுமையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுபவர், அவர் முன்னாள் தொழிலதிபர் என்பதால் அவருடைய அணுகுமுறையே சற்றே வித்தியாசமாக தான் இருக்கும், அவரது பல்வேறு முடிவுகளும் பேச்சுகளும் சர்ச்சை ஆகினாலும் கூட எதையும் திரும்ப பெற மாட்டார், அவருடைய முடிவுகளை தைரியமாக எடுப்பார், அதுவே தீர்க்கமானது என்றும் யோசிப்பார்,
பொதுவாக அவரது பாலிசி என்பது கிட்ட தட்ட ஒரு Give And Take Policy தான், நாம் அமெரிக்காவிற்கு என்ன செய்கிறோமோ அதை அப்படியே திருப்பி செய்வார், முக்கியமாக டிரம்ப் சீனாவிற்கு எதிரானவர், சீன பொருட்களின் இறக்குமதியை அமெரிக்காவில் குறைக்க சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 60 சதவிகிதம் ஆக உயர்த்த டிரம்ப் ஏற்கனவே முடிவெடுத்து இருக்கிறாராம்,
இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல, அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிகம் வரி விதிப்பதால், இந்தியாவும் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைக்கு இரையாகக்கூடும், இது போக இனிமேல் அமெரிக்காவில் வசிக்கும் அயல்நாட்டவர்கள், அமெரிக்காவில் குழந்தை பெறும் பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட மாட்டாது, இதனால் கிட்டதட்ட அமெரிக்காவில் வசிக்கும் 10 இலட்சம் இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்.