HMPV Outbreak In China - கோவிட் 19 ஓய்ந்து 5 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் தற்போது சீனாவை மெட்டா நியூமோ என்ற புதிய வைரஸ் அச்சுறுத்தி வருகிறது, மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை சீனாவில் உருவாகி இருப்பதால், பெரும்பாலான சீன மருத்துவமனைகள் மக்கள் அலையில் மூழ்கி கிடக்கிறது, காற்றில் எளிதாக பரவக்கூடிய வைரஸ் தற்போது தொற்று நோயாக உருவெடுத்து இருக்கிறதாம்.
பொதுவாக இந்த மெட்டா நியூமோ எனப்படும் HMPV வைரஸ் பாதித்தவர்களுக்கு முதலில் ஜலதோசம், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக தகவல், நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பவர்களுக்கு எளிதாக இந்நோய் பரவக்கூடும் எனவும் ஏற்கனவே ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் தகவல்.
நோயின் நிலை முதற்கட்டத்தில் இருக்கும் போதே மருத்துவமனைக்கு சென்லவது நன்று, தீவிரம் அடைந்து விட்டால் தீவிர சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டு மரணத்தை தழுவவும் வாய்ப்பு இருக்கிறதாம், காற்றில் எளிதாக இவ்வைரஸ் பரவக்கூடும் என்பதால் சீனாவில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இதனால் சீனாவில் ஒரு அவசர நிலை ஏற்பட்டு இருக்கிறது.
சரி இந்த வைரஸ் புதிய வைரஸ்சா என்றால் இல்லை, இந்த மெட்டா நியூமோ வைரஸ் எனப்படும் HMPV வைரஸ் 2001 யிலேயே கண்டு பிடிக்கப்பட்டு விட்டதாம், இந்த வைரஸ்சோடு நிமோனியா, கோவிட் 19 போன்றவைகளும் தற்போது சீனாவில் பரவி வருவதால் தான் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டு இருப்பதாக சீன மருத்துவ துறை கருத்து தெரிவித்து இருக்கிறது.