Google Faces RS 26,000 Crore Penalty - உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆக அறியப்படும் கூகுளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதில் 15 ஆண்டுகளுக்கு பின் ஜெயித்தும் இருக்கிறது ஒரு ஜோடி.
Google Faces RS 26,000 Crore Penalty - கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இங்கிலாந்து தொழில் முனைவோர் ஜோடி, ஐரோப்பிய நீதிமன்றத்தில், கூகுள் என்ற மிகப்பெரிய ஜியாண்ட் நிறுவனத்திற்கு எதிராக தொடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பு கிடைத்து இருக்கிறது, ஐரோப்பிய நீதிமன்றம், கூகுள் நிறுவனம் சந்தை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை உறுதி செய்து கூகுளுக்கு இந்திய மதிப்பில் 26,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது.
அப்படி என்ன கூகுளுக்கு அந்த ஜோடிக்கும் பிரச்சினை?
ஷிவாயூன் மற்றும் ஆடம் ராஃப் என்ற ஜோடி 2006 ஆம் ஆண்டு பவுண்டெம் என்ற ஒரு ஆன்லைன் நிறுவனத்தை தோற்றுவிக்கிறது, அவர்கள் அந்த வெப்சைட்டை எலக்ட்ரானிக்ஸ், குட்ஸ் மற்றும் விமானசேவைகளின் சிறந்த டீல்ஸ்களை அறியும் படி சரியான நம்பிக்கைக்குரிய தளமாக வடிவமைத்து இருந்தனர், இதனால் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்திலேயே அவர்கள் வெகுவாக கவர்ந்தனர். 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சிறந்த விலை ஒப்பீட்டு வலைத்தளம் என்ற பெயரும் பெற்றது,
ஆனால் அவர்களது தளம் மற்ற தேடுபொறிகளில் செயல்படுவது போல, கூகுளில் செயல்படவில்லை, தேடுதல்களில் முதலாவதாக இல்லை, வேகம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது, இதன் காரணமாக பல முறை கூகுளிடம் பிரச்சினை குறித்து முறையிட்டனர், ஆனால் கூகுள் கண்டுகொள்ளவில்லை, இங்கிலாந்து, அமெரிக்கா என பல கூகுளின் தலைமை நிறுவனங்கள் சென்று இந்த பிரச்சினை குறித்து முறையிட்டும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஷிவாயூன் மற்றும் ஆடம் ராஃப் என்ற ஜோடி இந்த பிரச்சினை குறித்து கூகுள் மீது வழக்கு தொடர்ந்தனர், ஐரோப்பிய நீதிமன்றமும் வழக்கை விசாரித்தது, விசாரணையில் கூகுள் சந்தை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததும், ஒரு சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, மற்ற போட்டி நிறுவனங்களை கூகுளின் தேடல்களில் பின்னுக்கு தள்ளியதும் தெரிய வந்தது.
கிட்டதட்ட 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் முடிவில் தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது, அதாவது உலகின் மிகப்பெரிய ஜியாண்ட் நிறுவனமாக அறியப்படும் கூகுள் சந்தை விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், கூகுள் ஒரு சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, மற்ற நிறுவனங்களை மட்டுப்படுத்துவதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், கூகுள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 26,000 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு இருக்கிறது ஐரோப்பிய நீதிமன்றம்.
" உலகின் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படும் கூகுள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது, கூகுளின் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, இதனால் கூகுள் அதன் பயனாளர்களிடையே நம்பிக்கை தன்மையையும் இழந்து இருக்கிறது "