• India
```

போச்சு..இனிமே குட்டி குட்டி பிசினஸ் வச்சிருக்கிறவங்க...கூகுள்ல விளம்பரம் கொடுக்க முடியாது..!

Google Ads New Regulations For Local Business Works

By Ramesh

Published on:  2024-10-30 03:24:25  |    376

Google Ads New Regulations For Local Business Works - கூகுள் நிறுவனத்தின் புதிய விதிகளால் பல சிறு குறு நிறுவனங்கள் வைத்திருக்கும் மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படும் வாய்ப்பு எழுந்து இருக்கிறது.

Google Ads New Regulations For Local Business Works - கூகுள் தளத்தில் இனிமேல் கூகுளால் அங்கீகரிக்கப்பட்ட வெரிஃபை செய்யப்பட்ட பிசினஸ் அக்கவுண்ட் மட்டுமே விளம்பரம் செய்ய முடியும் என்ற புதிய விதியை கூகுள் பிசினஸ் அமைப்பு அறிமுகப்படுத்தி இருக்கிறது, இதுவரையில் எந்த ஒரு குட்டி பிசினஸ்சை கூட கூகுளில் விளம்பரம் செய்ய முடியும் என்று இருந்த நிலையில் புதியதாக மாற்றப்பட்ட விதிகளால் சிறு குறு நிறுவனங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது முதலில் கூகுளில் விளம்பரம் கொடுக்க, ஒரு கூகுள் அக்கவுண்டும் விளம்பரத்திற்காக ஒரு நிறுவனம் குறித்த ஒரு கன்டன்டும் இருந்தால் போதும், இதனால் பல சிறு குறு நிறுவனங்கள் எளிதாக தங்கள் நிறுவனத்தை ஆன்லைனில் விளம்பரப்படுத்த முடிந்தது, ஆனால் இனிமேல் அப்படி செய்ய முடியாது, முதலில் உங்களது நிறுவனம் உண்மையில் இருக்கிறதா என்பதை கூகுள் ஆய்வு செய்யும்.



அதாவது நீங்கள் கொடுத்து இருக்கும் முகவரியில் உங்களது நிறுவனம் உண்மையில் இருக்கிறதா என்பதை கூகுள் முதலில் ஆய்வு செய்யும், அது வீடியோ வெரிபிகேசனாக இருக்கலாம் என கூறப்படுகிறது, உங்கள் நிறுவனம், நிறுவனத்தின் பேக்கிரவுண்ட் என அனைத்தையும் ஆராய்ந்த பிறகு உங்கள் நிறுவனத்தின் அக்கவுண்டை வெரிஃபைடு அக்கவுண்டாக மாற்றும். இதற்கு நிச்சயம் உங்களது நிறுவனத்தை அதிகாரப்பூர்வ பிசினஸ் ஆக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது, 

அதாவது உங்களது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக லைசென்ஸ் எல்லாம் பெற்று செயல்பட வேண்டும், உங்கள் நிறுவனத்தை இயக்குவதற்கு என்று குறிப்பிடத்தக்க ரிஜிஸ்டர் செய்யப்பட்ட ஒரு இடம் இருக்க வேண்டும், இஸ்டத்திற்கு ஒரு முகவரி போட்டி இனிமேல் கூகுளில் விளம்பரங்கள் கொடுக்க இயலாது. ரிஜிஸ்டர் செய்யாத சிறு குறு நிறுவனங்களும் இனி விளம்பரம் செய்ய முடியாது. கூகுளின் புதிய விதிகளால் பல சிறு குறு நிறுவனங்களுக்கு விளம்பரம் எட்டாக் கனியாக மாறி விடும் போல.