• India
```

உலகில் மிகப்பெரிய சந்தையை கொண்டு இருப்பது எது...ஆயிலா அல்லது தங்கமா...?

Gold VS Oil

By Ramesh

Published on:  2025-01-31 09:42:10  |    43

Gold VS Oil - உலகில் மிகப்பெரிய சந்தையை கொண்டு இருப்பது ஆயிலா அல்லது தங்கமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gold VS Oil - இங்கு எல்லோருக்குமே பொதுவாக எழும் சந்தேகம் தான் இது, உலகில் மிகப்பெரிய சந்தையை கொண்டு இருப்பது ஆயிலாக இருக்குமா அல்லது தங்கமாக இருக்குமா என்பது தான், பொதுவாக சட்டென்று கேட்டால் அனைவரும் என்ன சொல்வார்கள் என்றால் தங்கமாக தான் இருக்கும், அது தானே விலை உயர்ந்த பொருள் என்று சொல்வார்கள்,

ஆனால் உண்மையில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய சந்தையையும், மிகப்பெரிய சந்தை மதிப்பையும் கொண்டு இருப்பது ஆயில் தான், அதன் மதிப்பு மட்டும் கடந்த நிதி ஆண்டில் 3 ட்ரில்லியன் டாலர்களை தாண்டும் என கூறப்படுகிறது, அதே சமயத்தில் தங்கத்தின் மதிப்பு கடந்த நிதி ஆண்டில் 276.04 பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது,



காரணம் ஆயில் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு வினாடி பயன்பாடாக இருக்கிறது, அதாவது அதிக பயன்பாடு, அதிக பயனர்கள் என்ற ஈகுவேசனுக்குள் ஆயில் வந்து விடுகிறது, ஆனால் தங்கம் அப்படி இல்லை, பொருளாதாரம் சரியும் போதெல்லாம் தங்கத்தில் விலை உயரும், ஆயிலின் விலை சரியும், பொருளாதாரம் உயரும் போதெல்லாம் ஆயில் கூடும், தங்கம் குறையும்,

மதிப்பை பொறுத்தவரை தங்கம் தான் டாப், ஒரு அவுன்ஸ் தங்கத்தை வைத்து இன்றைய மதிப்பில் 40 பேரல்களுக்கும் மேல் ஆயில் வாங்க முடியும், ஆனால் சந்தை மதிப்பு, சந்தை பயன்பாடு என்று வரும் போது ஆயில் தான் இங்கு டாப் ஆக இருக்கிறது, ஆகவே உலகின் மிகப்பெரிய சந்தையை ஆட்கொண்டு இருப்பது எது என்றால் ஆயில் என்ற முடிவுக்கே வந்து விடலாம்.