Adani’s Net Worth Drops By Over ₹88,726 Crore In One day - எங்கோ இருக்கும் அமெரிக்காவில் அதானியின் மீது விழுந்த ஊழல் குற்றச்சாட்டு இங்கு இந்தியாவில் அவரது ரூ 88,726 கோடியை சரித்து இருக்கிறது.
Adani’s Net Worth Drops By Over ₹88,726 Crore In One day - சரி, அது என்ன குற்றச்சாட்டு என்று கேட்டால், இந்தியா புதுப்பிக்க தக்க ஆற்றலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, சோலார் ப்ராஜக்டுகள் இந்தியாவில் இதனால் அதிகரித்து வருகின்றன, அதானி குழுமம் அரசுடன் இணைந்து பல மாநிலங்களில் சோலார் ப்ராஜக்டுகளை அமைத்து வருகிறது, ஆனாலும் இந்த சோலார் மின் ஒப்பந்தங்களை முழுக்க முழுக்க பெறுவது தானே பெறுவது தான் அதானி குழுமத்தின் நோக்கமாம்.
இந்தியா முழுவதும் அமைக்கப்படும் இந்த சோலார் மின் சக்தி ஒப்பந்தங்களை முழுவதும் பெறுவதற்காக கவுதம் அதானி மற்றும் அதானி குழுமம், இந்திய அதிகாரிகளுக்கு கிட்டதட்ட 250 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 2,100 கோடி ரூபாயை வாரி இறைத்து இருக்கிறதாம். இதன் மூலம் ஒப்பந்தங்கள் அனைத்தும் அதானி குழுமத்தின் வசப்படும், நாளை அவர்கள் நிர்ணயிப்பது தான் விலையாகவும் இருக்கும்.
இது முதல் குற்றச்சாட்டு என்றால், இந்த ப்ராஜக்டுகள் மூலம் அதானி குழுமம் அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களிடம் இருந்து 170 மில்லியன் டாலர் முதலீடுகளை பெற்று இருக்கிறதாம், வரும் காலங்களில் இந்த முதலீடு 2 பில்லியன் டாலர் வரை செல்ல இருக்கிறதாம், இதனை அமெரிக்கா கண்டுபிடித்து போட்டு உடைக்கவே அதானி குழுமத்தின் குட்டு உடைந்து இருக்கிறது.
என்ன தான் இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தாலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வலிமையான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை கருத்துதெரிவித்து இருக்கிறது, இந்த குற்றச்சாட்டுகள் பங்குச்சந்தையில் பிரதிபலித்ததால், ஒரே நாளில் அதானியின் நிகர சொத்து மதிப்பு 88,726 கோடி சரிந்து இருக்கிறது, பங்குச்சந்தையிலும் இதனால் முதலீட்டாளர்களுக்கு 2 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்.
" ஒருவேளை குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் அதானி குழுமம் வரும் காலங்களில் மிகப்பெரிய இழப்பை சந்திக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் "