• India
```

ஊழல் குற்றச்சாட்டால்...இரண்டே நாளில் ஒரு இலட்சம் கோடியை இழந்த அதானி குழுமம்...!

Gautam Adani Losses 1 Lakh Crores In Just Two Days

By Ramesh

Published on:  2024-11-24 00:25:50  |    128

Gautam Adani Losses 1 Lakh Crores In Just Two Days - அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது தொடுக்கப்பட்டு இருக்கும் ஊழல் குற்றச்சாட்டால் அதானி குழுமம் இரண்டே நாளில் 1 இலட்சம் கோடி இழப்பை சந்தித்து இருக்கிறது.

Gautam Adani Losses 1 Lakh Crores In Just Two Days - இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை போட்டி போட்டுக் கொண்டு பிடித்து இருப்பது முகேஷ் அம்பானியும், கவுதம் அதானியும் தான், இருவரும் ஒவ்வொரு மாதமும் மாற்றி மாற்றி முதல் இரண்டு இடத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர், தற்போதைய நிலையில் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 116 பில்லியன் டாலராக இருப்பதாக தகவல்.

இந்த நிலையில் தான் கவுதம் அதானியின் மீது அமெரிக்க நீதிமன்றத்தின் ஒரு ஊழல் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டுள்ளது, அதாவது அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு என்பது, சூரிய மின் சக்தி பிராஜக்டுகளை, இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அனைத்து ஒப்பந்தங்களையும் முழுமையாக பெற்றுக் கொண்டு அதன் மூலம் அந்நிய முதலீடுகளை அதிகமாக கைப்பற்றியது தான்.



அதானி குழுமத்தின் அடுக்கடுக்காக விழுந்து இருக்கும் இந்த குற்றச்சாட்டுகளால், அதானி குழுமம் கிட்டதட்ட ஸ்தம்பித்து இருக்கிறது, கடந்த இரண்டு நாளில் மட்டும் அதானி குழுமம் தனது நிகர சொத்தில் 13.5 இலட்சம் டாலர்கள் இழப்பை சந்தித்து இருக்கிறது, இந்திய மதிப்பில் கிட்டதட்ட அது ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது, பங்குச்சந்தையிலும் அதானி குழுமத்தின் பங்குகள் அடி வாங்கி வருகின்றன.

இந்த இழப்பினால் உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலிலும் கவுதம் அதானிக்கு சரிவு ஏற்பட்டு இருக்கிறது, உலகளாவிய நிகழ்கால பணக்காரர்கள் பட்டியலில் 22 ஆவது இடத்தில் இருந்த கவுதம் அதானி, தற்போது மூன்று இடங்கள் சரிந்து 25 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார், கடந்த இரண்டு நாளில் அவர் இழந்த சொத்துக்களை மீட்க அதானி குழுமம் குறைந்த பட்சம் ஒரு வருடம் ஓய்வின்றி உழைக்க வேண்டுமாம்.