Gamma Point Capital Rahul Rai -IIT படிப்பை பாதியில் கைவிட்ட ராகுல் ராய், ஐந்தே மாதங்களில் ரூ 286 கோடி சம்பாதித்து அனைவரையும் அசதி பெரும் சாதனை செய்துள்ளார் மேலும் , 2015ல் IIT-ஐ கைவிட்ட இவர், அமெரிக்காவில் வணிகத்தில் பட்டம் பெற்றதும், இந்தியாவில் Gamma Point Capital என்ற கிரிப்டோ ஹெட்ஜ் நிதி நிறுவனத்தை தொடங்கியதாகத் தகவல்கள் வந்துள்ளது . தற்போது BlockTower Capital நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ராகுல், தனது நிறுவனத்தை வெற்றியுடன் விற்பனை செய்துள்ளார்.
இந்தியாவில் IIT படிப்பு பல மாணவர்களுக்கு கனவாகவே இருக்கிறது , ஆனால் சிலர் வாய்ப்பு அமைந்ததும் படிப்பை கைவிட்டு வெற்றியை கண்டுள்ளார்கள் .
சொந்தமாக நிறுவனம்
அதில் ஒருவர் ராகுல் ராய். மும்பை IIT-ல் படிக்க வாய்ப்பு பெற்ற ராகுல், பொறியியல் பட்டம் பெறாமல் பாதியில் வெளியேறி உள்ளார் . 2015ல் IIT படிப்பை கைவிட்ட அவர் , அமெரிக்காவில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் வணிகம் படித்து 2019ல் பட்டம் பெற்றார் .
முதல் Morgan Stanley நிறுவனத்தில் வேலை பெற்ற அவர், 2020ல் வேலைவிட்டுப் சொந்த நிறுவனத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியாவுக்கு திரும்பினார்.
பரவலாக்கப்பட்ட நிதிக் கொள்கையில் ஆர்வம்
ராகுல் நிதிக் கொள்கையில் ஆர்வம் கொண்டிருந்ததால், 2021 ஜனவரியில் தன் நண்பர்கள் இருவருடன் இணைந்து Gamma Point Capital என்ற கிரிப்டோ ஹெட்ஜ் நிதி நிறுவனத்தை நிறுவினார்.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
இவர்களின் நிதி டிஜிட்டல் சொத்துகள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யப் பயன்படுத்தப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு, BlockTower Capital என்ற நிறுவனம் அவர்களுடைய நிறுவனத்தை பெருந்தொகைக்கு வாங்க முன்வந்தார்கள் .
2021 மே மாதம் ரூ 286 கோடிக்கு இவர்களின் நிறுவனம் கை மாறி இருந்தது . ஐந்தே மாதங்களில் நிறுவனத்தை விற்பது குறித்து கடினமான முடிவாக இருந்தாலும், BlockTower Capital முன்வைத்த தொகையை சம்பாதிக்க பல வருடங்கள் உழைக்க வேண்டியுள்ளது என்பதை புரிந்துகொண்ட ராகுல் மற்றும் அவருடைய நண்பர்கள் அவர்களது நிறுவனத்தை விற்க ஒப்புக்கொண்டனர்.