• India

வருகிறது...Flipkart யின் குடியரசு நாள் சிறப்பு விற்பனை...என்ன என்ன ஆபர்கள் எதிர்பார்க்கலாம்...?

Flipkart Republic Day Sale Offers

By Ramesh

Published on:  2025-01-09 12:11:57  |    250

Flipkart Republic Day Sale Offers - பண்டிகை என்றாலே முன்பெல்லாம் சந்தைகள் மக்கள் கூட்டமும், திருவிழா போல விற்பனை சந்தைகளும் ஆரவாரமாக இருக்கும், இப்போது மக்கள் எல்லாம் ஆன்லைன் மக்களாக மாறி விட்டார்கள், சந்தைகளும் ஆன்லைன் சந்தைகளாக மாறி விட்டது, வீட்டிற்கு தேவையான அத்துனையும் ஆன்லைனிலேயே கிடைப்பதால் தற்போது சந்தை திருவிழாக்கள் ஆன்லைன் திருவிழாக்கள் ஆகி விட்டது.

அந்த வகையில் வருகின்ற குடியரசு தின நாளை முன்னிட்டு, இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஈ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் என இரண்டும் விழாக் கால சலுகை விற்பனையை அறிவித்து இருக்கின்றன, இந்த வகையில் வால்ட்மார்ட்டின் Flipkart நிறுவனம் என்ன என்ன ஆபர்களை அறிவித்து இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.



சரி என்ன என்ன ஆபர்கள், Flipkart இந்த குடியரசு தின நாளில் வழங்குகிறது?

1) சரி என்று ஆரம்பிக்கிறது என்றால், ப்ளிப்கார்ட் + வாடிக்கையாளர்களுக்கு, ஜனவரி 13 ஆம் தேதியும், இதர வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதியும் இந்த விழாக்கால விற்பனை ஆரம்பமாகிறது,

2) முதலாவதாக Flipkart Axis Card பயன்படுத்தி பொருட்கள் வாங்கும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 5% கேஷ் பேக் ஆபர்கள் வழங்கப்படும்,

3) iPhone 16 க்கு ரூ 10,000 வரை விலை குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,அதன் விற்பனை விலை 74,900 ஆக இருக்கும் நிலையில், விழாக்கால விற்பனை விலை 63,999 ரூபாய் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

4) அது போல Samsung Galaxy S24 மொபைலின் விலையும் இந்த ஆபரில் ரூ 10,000 வரை குறைய வாய்ப்பு இருக்கிறதாம்,

5) Revolutionary Deals: ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு வெறும் 76 ரூபாய்க்கு பல மதிப்புகூட்டப்பட்ட பொருள்களின் விற்பனை இருக்குமாம்.

6) ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு புதிய டீல் அறிமுகப்படுத்தப்படுமாம்,

7) நிறைய எலக்ட்ரானிக் பொருள்களுக்கு கேஷ் பேக் ஆபர்கள் வழங்க்கப்பட இருக்கிறதாம், எப்போதும் இல்லாத விலையில் பல பொருள்களுக்கு விலைகுறைப்பு செய்யப்பட்டு அதிரடியாக இந்த குடியரசு நாளை Flipkart கொண்டாடப்பட இருப்பதாக தகவல்.

" எதிரே போட்டிக்கு அமேசானும் ஒரு நாளுக்கு முன்னதாகவே விழாக்கால சலுகைகள் மற்றும் விற்பனைகளை அறிவித்து இருக்கிறது, எது வாடிக்கையாளர்களை இழுக்க போகிறது என்பதை ஆபர்கள் தான் முடிவு செய்யும், அந்த வகையில் பொறுத்து இருந்து பார்க்கலாம் "