Flipkart-இன் The Big Billion Days (TBBD) 2024, 33 கோடிக்கும் அதிகமான பயனர்கள் மொபைல்கள், எலெக்ட்ரானிக்குகள், மற்றும் வேறு பல வகைகளில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
Flipkart-இன் The Big Billion Days (TBBD) 2024, முதல் நாளில் 33 கோடிக்கும் அதிகமான பயனர் வருகைகளைப் பதிவு செய்ததால் வெற்றிகரமான தொடக்கத்தை பெற்றுள்ளது. இந்த விற்பனையில் மொபைல்கள், எலெக்ட்ரானிக்குகள், பெரிய உபகரணங்கள், பேஷன், அழகு மற்றும் வீட்டு தயாரிப்புகள் போன்ற வகைகளில் வாடிக்கையாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.
முக்கிய நகரங்களில், புது டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் TBBD 2024 இன் முதல் 24 மணிநேரத்தில் தேவை பெரிதாக உள்ளது.மேலும் இதன் மூலம், Flipkart தனது புதிய 'மினிட்ஸ்' விரைவான டெலிவரி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில்,Flipkart-யின் ஒரு அறிக்கையில், மும்பை போன்ற நகரங்களில், hyperlocal பின் கோடுகளில் உள்ள அனைத்து எலெக்ட்ரானிக்குகளின் விற்பனையின் 25% Flipkart நிமிட டெலிவரிகளிலிருந்து கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.