• India
```

இந்திய மீனவர்களின் செயல்பாடுகள் சரி இல்லை...அதனால் தான் கைது நடவடிக்கை தொடருகிறது...இலங்கை அமைச்சர் பேட்டி...!

Fisherman Arrested

By Ramesh

Published on:  2025-01-30 13:12:44  |    15

Fisherman Arrested - தொடர்ந்து இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை கடல் வளத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Fisherman Arrested - தினசரி பேப்பரையோ, நியூஸ் சேனலையோ தூக்கினால் ஏதாவது இரு பக்கத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது என்ற செய்தி இருக்கும், இது இன்று நேற்று இல்லை பட டிகேடுகளாக தொடரும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது, இது குறித்து இரு நாடுகளும் பல முறை வாய்வார்த்தையாக பேசிக் கொண்டாலும் கூட கைது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடவழி பார்டர்கள் பிரிப்பு என்பது 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு கையெழுத்தும் ஆனது, ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு பின்பும் கூட இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு என்பது அன்று முதல் இன்றுவரை தினசரி நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, கடந்த 2024 யில் மட்டும் 535 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.



அவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் அல்லாமல் அவர்கள் படகுகள் சிறை பிடிக்கப்பட்டு சேதப்படுத்தப்படுகின்றன, ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அவர் விடுதலை செய்யப்பட்டாலும் கூட இந்தியா வரும் மீனவர்கள் மீண்டும் ஜீரோவில் இருந்து தங்களது பொருளாதாரத்தை துவங்கும் நிலை ஏற்படுகிறது.

இது குறித்து இலங்கை கடல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் கூறுகையில், 'எல்லை தாண்டுகின்ற இந்திய மீனவர்களின் செயல்பாடுகள் தான் எங்களுக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது, அதனால் தான் கைது நடவடிக்கை என்பது தொடர்கிறது, இது குறித்து இந்தியாவுடன் இணக்கமான பேச்சுவார்த்தை நடத்தவும் தயார்' என பேட்டி அளித்து இருக்கிறார்.

" துப்பாக்கி சூடு, படகுகள் சேதம், மீனவர்கள் கைது என தினம் தினம் நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் செயல்பாடுகளை வெகு விரைவில் இரு அரசுகளும் பேசி ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என்பது தான் மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது "