• India
```

ஃபெஞ்சல் புயல் எதிரொலி...சென்னையில் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து...!

Fengal Cyclone Indigo Suspends All Flights At Chennai

By Ramesh

Published on:  2024-11-30 18:30:35  |    159

Fengal Cyclone: Indigo Suspends All Flights At Chennai - மோசமான வானிலை சூழலால் சென்னையில் இருந்து புறப்படவிருந்த, சென்னை வரவிருந்த அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ அறிவித்து இருக்கிறது.

Fengal Cyclone: Indigo Suspends All Flights At Chennai - வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஃபெஞ்சல் புயல் ஆனது தமிழகத்தை மெல்ல மெல்ல நெருங்கி வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது, மோசமான வானிலை நிலவி வருவதால் சென்னையில் இருந்து புறப்படவிருந்த மற்றும் சென்னை வரவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன, 

இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம், சென்னையில் இருந்து புறப்படவிருக்கும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது, மோசமான வானிலையால் விமானத்தை இயக்கும் சூழ்நிலை இல்லாததால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ அறிவித்து இருக்கிறது, சென்னை வரவிருந்த இண்டிகோ விமானங்களும் பிற விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



அபுதாபியில் இருந்து வந்த சென்னை வந்த விமானமும் மோசமான வானிலையால் பெங்களுரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல், புயல் நகரும் வேகம் என்பது மிக மெதுவாக இருப்பதால் கரையை கடப்பதற்கு நாளை அதிகாலை கூட ஆகலாம் என கூறப்படுகிறது, இதனால் அதி தீவிர மழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்றும் நாளையும் முற்றிலுமாக விமான சேவைகள் சென்னையில் முடங்கி விடும் அபாயம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு பயணிக்க இருந்த வெளிமாநில பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் முடங்கி கிடக்கின்றனர், பல விமானங்களின் ரத்தால் பல வெளிநாட்டு பயணிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.