• India
```

Fengal Cyclone: 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...தனியார் பள்ளிகள் மாணவர்களை வர வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...!

Fengal Cyclone: Holiday Declared For School And Colleges

By Ramesh

Published on:  2024-11-30 16:41:22  |    167

Fengal Cyclone: Holiday Declared For School And Colleges - ஃபெஞ்சல் புயலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

Fengal Cyclone: Holiday Declared For School And Colleges - வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஃபெஞ்சல் புயல் மெல்ல மெல்ல நகர்ந்து சென்னையை நெருங்கி வருகிறது, இதனால் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, மழை காற்று உள்ளிட்டவைகளால் மக்கள் வெளியிலேயே வர முடியாத சூழல் நிலவி வருகிறது, இன்னும் காற்றின் வேகமும், மழையும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

வானிலையின் இந்த சூழலை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகலுக்கு விடுமுறை அளித்து இருக்கின்றனர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூரில் ஒரு சில தாலுகாக்கள் என மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.



ஒரு சில தனியார் பள்ளிகளும் கல்லூரிகளை மாணவர்களை பள்ளிக்கும், கல்லூரிக்கும் வர கட்டாயப் படுத்துவதாக பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில், அவ்வாறாக விடுமுறையை செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்களும், முதன்மை கல்வி அலுவலர்களும் எச்சரித்து இருக்கின்றனர்.

பெரும்பாலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாலும், வானிலைகளின் நிலைமை மோசமாக இருப்பதாலும் ஆன்லைன் கிளாஸ்களும் வேண்டம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்க கூடும் என்பதால் கரையோர மக்கள் அரசு ஏற்படுத்தி உள்ள தற்காலிக முகாம்களில் தங்கிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.