• India
```

Fengal Cyclone: தீவிரம் அடைந்த மழை...சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்...!

Fengal Cyclone Chennai Airport Temporarily Closed

By Ramesh

Published on:  2024-11-30 19:37:15  |    145

Fengal Cyclone: Chennai Airport Temporarily Closed - அதிதீவிர மழையால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

Fengal Cyclone: Chennai Airport Temporarily Closed - இலங்கை அருகே நிலை கொண்டு இருந்த ஃபெஞ்சல் புயல் ஆனது தமிழகத்தை நோக்கி மெல்ல மெல்ல நெருங்கி வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது, மோசமான வானிலை நிலவி வருவதால் சென்னையில் இருந்து புறப்படவிருந்த மற்றும் சென்னை வரவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன, 

இன்றும் முழுவதும் விமான சேவைகள் முடங்கி விடும் அபாயம் இருப்பதால், சென்னைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு பயணிக்க இருந்த வெளிமாநில பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் முடங்கி கிடக்கின்றனர், பல விமானங்களின் ரத்தால் பல வெளிநாட்டு பயணிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.



தொடர் மழைப்பொழிவால் சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகள் முழுக்க மழை நீர் தேங்க ஆரம்பித்து விட்டது, இதனால் ஓடுபாதைகள் சேதமடையவும் வாய்ப்பு இருப்பதாக தகவல், புயல் கரையைக் கடந்து, மழை நின்றால் மட்டுமே அனைத்தையும் சரி செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால், மழை நின்றாலும் விமான சேவையை இயக்குவது என்பது தாமதம் ஆகலாம்.

ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமானநிலையத்தில் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர், அவர்கள் வெளியிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால், அவர்களுக்கு விமான நிலையத்திலேயே உணவு வழங்கிடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன, தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கும் மழையால் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.