Elon Musk Will Not Be First Trillionaire - எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியனர் ஆக மாட்டார் என அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் கூறி இருக்கிறார். அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஆக அறியப்படும் மார்க் கியூபன் உலகின் முதல் ட்ரில்லியனர் ஆக எலான் மஸ்க் இருக்க மாட்டார் என்ற கருத்தை கூறி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது, பொதுவாகவே மார்க் கியூபன் கணிப்புகளில் வல்லவர், இவர் தான் கடந்த 2017 யிலேயே செயற்கை நுண்ணறிவு இந்த உலகை ஆட்கொள்ளும் என்ற கருத்தை தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் அவர் கூறியது போலவே செயற்கை நுண்ணறிவு தற்போது உலகலாவிய அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, தற்போது எலான் மஸ்க் உலகின் நம்பர் 1 பணக்காரராக கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர் மதிப்பில் நிகர சொத்துக்களை வைத்து இருப்பதாக கூறுகின்றனர், வரும் 2027 ற்குள் உலகின் முதல் ட்ரில்லியனராகவும் உருவெடுப்பார் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
ஆனால் அமெரிக்க தொழிலதிபர் மார்க் கியூபனுக்கு அந்த நம்பிக்கை இல்லை, அவர் மீண்டும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் யார் கையில் இருக்கிறதோ அவர் தான் எதிர்காலத்தின் முதல் ட்ரில்லியனர் ஆவார்கள் என்பதை உறுதியாக கூறி இருக்கிறார், 2017 யில் சரியாக கணித்தவர், தற்போது கூறி இருக்கும் கணிப்பும் எதிர்காலத்தில் நிஜமாகுமா என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனாலும் செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு ஆகப்பெரும் கடல், அதை முழுவதும் ஆராய்வது என்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல, ஆனாலு ஸ்கோப் என்பது நிச்சயம் இருக்கிறது, எதிர்காலத்தில் AI யின் ஆதிக்கம் நிச்சயம் இருக்கும் என்பதும் அறியப்படுகிறது, ஆனால் அதை யார் வலிமையாக கையாள போகிறார் என்பது தான் இங்கு புரியாத புதிர்.
" எலான் மஸ்க் கூட அந்த AI யை வழிநடத்தும் டிரைவர் ஆக இருக்கலாம், இல்லையேல் புதியதாக யாராவது திடீரென வந்து ஆதிக்கம் செலுத்தலாம், அதை காலம் தான் முடிவு செய்யும் "