Elon Musk Remains Wealthiest Billionaire - பிரபல Forbes நிறுவனம் டிசம்பர் வரையிலான உலகளாவிய பணக்காரர்களின் சொத்து மதிப்பை அளவிட்டு ஒரு பட்டியல் தயாரித்து இருக்கிறது, இப்பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார், கடந்த வருடம் அவரின் நிகர சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலர் இருந்த நிலையில் தற்போது 500 பில்லியன் டாலரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து எலான் மஸ்க் அவர்களின் சொத்து மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது, பங்குச்சந்தைகளிலும் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இலாபம் பார்த்து வருகின்றன, டிசம்பர் இறுதி வரையிலான கணக்கீட்டில் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 421.2 பில்லியன் டாலராக இருப்பதாக தகவல்.
எலான் மஸ்க்கை அடுத்து அமேசான் நிறுவனத்தின் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் 233.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புகளுடன் Forbes பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறார், Oracle நிறுவனத்தின் நிறுவனர் லேரி எல்லிசன் 209.7 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும், மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் 202.5 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் நான்கால் இடத்திலும் இருக்கின்றனர்.
பொதுவாக Forbes பட்டியலில் இருக்கும் எந்த பில்லியனர்களும் எலான் மஸ்க்கை நெருங்க முடியவில்லை என்பது தான் இப்பட்டியலின் மூலம் விளங்குகிறது, இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஆன ஜெஃப் பெசோஸ் கூட, எலான் மஸ்க்கை எட்டி பிடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரிகிறது, காரணம் இருவருக்கும் இடையில் 200 பில்லியன் டாலர் வேறுபாடு இருக்கிறது.