Edible Oil News in India -வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களுக்கு மத்திய அரசு 20 சதவிகிதத்திற்கு மேல் இறக்குமதி வரி விதித்து இருக்கிறது. ஏன் எதற்காக என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஏன் வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி?
பொதுவாக பெரிய பெரிய விற்பனை நிறுவனங்கள் இலாப நோக்கத்தில், ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் டை அப் வைத்துக் கொண்டு, சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றனர். அதற்காக இந்தியாவில் சமையல் எண்ணெய் தட்டுப்ப்பாடா என்று கேட்டால் அதெல்லாம் இல்லை. இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கு எல்லாம் எந்த தட்டுப்பாடும் இல்லை, நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நோக்கத்தில் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து எண்ணெய்களை இறக்குமதி செய்து வருகின்றன.
சரி, சமையல் எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் விற்பனை நிறுவனங்களுக்கு என்ன இலாபம்?
இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் தருகின்ற விலையை விட வெளிநாட்டு நிறுவனங்கள் சமையல் எண்ணெயை மலிவான விலைக்கு இறக்குமதி செய்து தருகின்றனவாம். அது போக சமையல் எண்ணெயை அதிக விலைக்கு விற்க முடிவதால், வெளிநாட்டு சமையல் எண்ணெய்கள் நிறுவனங்களுக்கு அதிக இலாபம் தருவதாக கூறப்படுகிறது. இதனால் தான் விற்பனை நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதாக கூறப்படுகிறது.
இதனால், இந்தியாவிற்கு என்ன நஷ்டம்?
இதனால் இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் சமையல் எண்ணெய்களை, விற்பனை நிறுவனங்கள் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு தான், மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களுக்கு 20 சதவிகிதத்திற்கும் மேலாக இறக்குமதி விதித்து இருக்கிறது. அதன் படி கச்சா பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய்க்கு 5.5 சதவிகிதம் இருந்த வரி, 27.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சுத்தீகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய்க்கு 13.75 சதவிகிதம் இருந்த வரி 33.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு செய்த இந்த அதிரடி நடவடிக்கையால் இனி வெளிநாட்டு சமையல் எண்ணெய் இறக்குமதி குறையலாம், உள்ளூர் சமையல் நிறுவனங்கள் உள்ளூர் விற்பனையாளர்களால் ஊக்குவிக்கப்படலாம்