Domestic Migrants Decreased - பிரதமரின் கீழ் இயங்கும் பொருளாதார ஆலோசனைப் பிரிவு சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது, அதாவது இந்தியாவில் இருந்து வேலைக்காக, பொருளாதார ரீதியாக தன்னை மேம்படுத்த என பிற மாநிலங்களுக்கு புலம் பெயர்பவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 12 சதவிகிதம் அளவிற்கு குறைந்து தற்போது 40.20 கோடியாக இருப்பதாக தகவல்.
இந்த தகவல் என்பது கடைசியாக 2011 அன்று எடுக்கப்பட்ட தகவல்களுக்கும், மற்றும் தர்போது 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தகவல்களுக்கும் இடையிலான ஒப்பீடு என கூறப்படுகிறது, இந்த 12 வருடத்தில் இந்தியா பொருளாதார ரீதியாக பல்வேறு ஏற்றங்களை சந்தித்து இருப்பதால், அந்தந்த மாநிலத்தவர், அந்தந்த மாநிலத்திலேயே அதிகமாக சம்பாதிக்க முடிகிறது என்னும் போது இந்த புலம்பெயர்வது குறைந்திருப்பதாக ஒரு தகவல்.
பொதுவாக இந்தியா ஒரு மிகப்பெரிய மார்க்கெட், அதனால் தான் பல்வேறு வெளிநாட்டினர் இந்தியாவில் தங்களது தொழிலை சந்தையை விரிவு படுத்த நினைக்கின்றனர், பொதுவாக ஒரு காலக்கட்டத்தில் ஒரு மாநிலத்தவர் இன்னொரு தொழில் நீதியான மாநிலத்திற்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதற்காக நகர்வது உண்டு, ஆனால் தற்போது இந்திய சந்தைகளின் மார்க்கெட் மதிப்பு அவர்களுக்கு புரிய ஆரம்பித்து இருக்கிறது.
தற்போது இந்தியர்கள் பலரில் பெரும்பாலானாவர்களின் மைண்ட் செட் என்பது, தொழில் ஆக இருக்கிறது, ஒரு பிற மாநிலத்தின் நிறுவனத்தின் கீழ் பணி புரிவதைக் காட்டிலும் ஒரு சிறிய தொழிலில் அதிலும் லோக்கலாக உள்ளூரிலேயே ஆரம்பித்து அதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள், இந்த காரணத்தினால் தான் புலம் பெயர்வோர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.