• India
```

குவியும் குற்றச்சாட்டு..சட்ட விரோதமாக தொழில் துவங்கினாரா.. எலான் மஸ்க்..?

Did Elon Musk Worked illegally In The US

By Ramesh

Published on:  2024-10-27 07:32:12  |    220

Did Elon Musk Worked illegally In The US - எலான் மஸ்க்கின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தொழில் துவங்கி இருப்பது பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது அது குறித்து பார்க்கலாம்.

Did Elon Musk Worked illegally In The US - உலகின் நம்பர் 1 பில்லியனராக அறியப்படும் எலான் மஸ்க், இன்று ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், டெஸ்லா போன்ற முன்னனி நிறுவனங்களை இலாபகரமாக இயக்கி வருகிறார், எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர், கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் மேல் படிப்பிற்காக 1995 ஆம் ஆண்டு அமெரிக்கா வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அங்கு அவர் படிப்பை அவர் நிறைவு செய்யவில்லை என கூறப்படுகிறது, மாறாக ஜிப் 2 என்ற மென்பொருள் நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்கியதாக தெரிகிறது, அது தான் எலான் மஸ்க்கின் முதல் ஸ்டார்ட் அப், பின்னாளில் அந்த நிறுவனத்தை சுமார் 300 மில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் விற்றார், அந்த நிகழ்வு தான் இன்று எலான் மஸ்க் உலகின் நம்பர் 1 பில்லியனர் ஆகி இருப்பதற்கு அடித்தளமாக அறியப்படுகிறது.


எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு படிப்பதற்காகவே வந்து இருக்கிறார், ஆனால் படிப்பை நிறைவு செய்யாமல் 1997 காலக்கட்டத்தில் தொழில் துவங்குவதற்கான அனுமதியைப் பெற்று இருக்கிறார், அமெரிக்காவின் சட்ட விதிமுறைகள் ஒரு அயல்நாட்டவர் ஒருவர் படிப்பதற்காக அமெரிக்கா வந்தால், படிப்பை நிறைவு செய்த பின்னரே தொழில் துவங்குவதற்கான அனுமதியை கோரமுடியுமாம். 

ஆனால் எலான் மஸ்க் படிப்பை நிறைவு செய்யாமல், தொழிலை துவங்க அனுமதியும் வாங்கி அதை 300 மில்லியன் டாலருக்கும் விற்று வருமானம் பார்த்து இருப்பதால், எலான் மஸ்க்கின் அடித்தளமே அமெரிக்காவின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என கூறப்படுகிறது, இதனை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்து இருக்கும் அமெரிக்க நாளிதழால் தற்போது எலான் மஸ்க்கின் அனைத்து நிறுவனங்களும் ஆட்டம் கண்டி இருக்கின்றன.