• India
```

அரை மணி நேரத்தில்...டெல்லியில் இருந்து நியூயார்க்...எலான் மஸ்க்கின் புதிய ஸ்டார் ஷிப்...!

Delhi To New York In Just 30 Minutes

By Ramesh

Published on:  2024-11-23 15:18:22  |    547

Delhi To New York In Just 30 Minutes - எலான் மஸ்க்கின் புதிய ஸ்டார் ஷிப் மூலம் டெல்லியில் இருந்து நியூயார்க்கிற்கு வெறும் அரை மணி நேரத்தில் பறக்க முடியுமாம், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Delhi To New York In Just 30 Minutes - ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், டெஸ்லா, நி்யுரோ லிங் என உலகின் பல முக்கிய நிறுவனங்களின் நிறுவனர் ஆக அறியப்படும் எலான் மஸ்க் புது புது கண்டு பிடிப்புகளின் வித்தகராக அறியப்படுகிறார், ஏதாவது ஒரு புதுமைகளை தினம் தினம் இந்த உலகிற்கு முன்னால் தான் கண்டு பிடித்துக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர் எலான் மஸ்க்.

அவரது அனைத்து ஆராய்ச்சியுமே ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்படும் போதெல்லாம், நிகழ்த்திக் காட்டுகிறேன் என சவால் விட்டு, தோற்று, விழுந்து, புரண்டு எப்படியேனும் அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார், அவரது எண்ணங்களிலும், திண்ணங்களிலும் அவர் கொள்ளும் தீரா நம்பிக்கை தான் அவரது வெற்றிக்கு காரணமாக சொல்லலாம்.



இந்த நிலையில் தான் ஒரு பயணிகள் ஸ்டார் ஷிப் குறித்த அறிவிப்பு ஒன்று எலான் மஸ்க் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கிறது, ராக்கெட்டுகளின் செயல்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பயணிகள் ஸ்டார் ஷிப் செய்தால் எப்பாடி இருக்கும் என்பது தான் எலான் மஸ்க்கின் சிந்தனை, இது சாத்தியம் ஆகும் பட்சத்தில் ஒரு பயணி 27,000 கி.மீ பயணத்தை 1 மணி நேரத்தில் கடக்க முடியும்.

அதாவது ஒரு பயணி டெல்லியில் இருந்து நியூயார்க் கிட்டதட்ட 12,000 கி.மீ என்பதை ஒரு சாதாரண விமானத்தால் 14 மணி நேரத்தில் கடக்க முடியும், ஆனால் எலான் மஸ்க்கின் இந்த ஸ்டார் ஷிப் மூலம் ஒரு பயணி அரை மணி நேரத்தில் டெல்லியில் இருந்து நியூயார்க் பறந்து விட முடியுமாம், இது சாத்தியமா என்று மனதிற்குள் எழுகிறது அல்லவா, அந்த கேள்விக்கு இப்போதே கூட நிகழ்த்திக் காட்டுகிறேன் என்பது எலான் மஸ்க்கின் பதில்.