Delhi HC Issues Notice To Wikipedia - தவறான தகவல்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து இணையங்களில் பரப்பி வருவதாக பிரபல தளம் ஆக அறியப்படும் விக்கிபீடியாவிற்கு இந்திய அரசு நோட்டீஸ் விடுத்து இருக்கிறது.
Delhi HC Issues Notice To Wikipedia - பிரபல தகவல் களஞ்சியம் ஆக அறியப்படும் விக்கிபீடியா இந்தியாவில் புதிய பிரச்சினையை எதிர் கொண்டு இருக்கிறது, தொடர்ந்து தவறான தகவல்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான விடயங்களை இணையங்களில் பரப்பி வருவதாக விக்கி பீடியாவிற்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டு இருக்கிறது,எது ஏன் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக விக்கிபீடியா பல தகவல்களை உள்ளடக்கிய ஒரு களஞ்சியம் ஆக செயல்பட்டாலும் கூட அது ஒரு குறிபிட்ட பக்கத்தை வாடிக்கையாளர்கள் எளிதாக எடிட் செய்யும் வசதியையும் கொண்டு இருக்கிறது, இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் ஒரு சில தகவல்களை தவறாகவும் சித்தரிக்கின்றனர், தற்போது அது தான் விக்கி பீடியாவிற்கு பிரச்சினை ஆகி இருக்கிறது.
பிரபல ஏசியன் நியூஸ் இண்டர்நேசனல் நிறுவனம் குறித்து விக்கிபீடியாவில் ‘இது தற்போதைய அரசாங்கத்திற்கு முட்டு கொடுக்கும் ஒரு பிரச்சார கருவி’ என கடுமையான வார்த்தைகளால் சித்தரிக்கப்பட்டு இருந்தது, இதனை கடுமையாக கண்டித்த ஏசியன் நியூஸ் இண்டர்நேசனல் (ANI) விக்கிபீடியா மீது ஒரு அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ’உங்கள் இஸ்டப்படிக்கு எல்லாம் இங்கு செயல்பட முடியாது, அவ்வாறாக நீங்கள் செயல்பட நினைத்தால் மொத்தமாக இந்தியாவில் முடக்கப்படுவீர்கள், பின்னர் மூட்டை முடிச்சை கட்டி கிளம்பியாக வேண்டிய நிலை ஏற்படும்’ என கடுமையாக எச்சரித்து இருக்கிறது, இது குறித்து விளக்கம் அளிக்க விக்கிபீடியா கால அவகாசம் கேட்டும் நீதிமன்றம் விக்கிபீடியாவிற்கு கொடுக்கவில்லை.
" பொதுவாக விக்கி பீடியாவிற்கு இந்தியாவில் எந்த ஒரு பிசிக்கல் அலுவலகமும் இல்லாததால், இந்த வழக்கை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது, இந்த இக்கட்டான சூழலை எப்படி விக்கிபீடியா எதிர்கொள்ள இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் "