Countries With Most Gold Reserves - பொதுவாக தங்கம் என்பது சரியாத விலைமதிப்பு கொண்ட ஒரு விலை உயர்ந்த பொருள், அது ஆபரணம் தயாரிக்க மட்டும் பயன்படுத்தப்படாமல் ஒரு சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது, எளிதான நெகிழ்வு தன்மை கொண்டது என்பதால் பொதுவாக ஆபரணங்கள் தயாரிக்க தங்கம் பெரிதளவில் உலகளாவிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சரி இந்த தங்கம் எந்த நாட்டில் அதிகம் எடுக்கப்படுகிறது என கேட்டால், சீனா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் மைனிங் மூலம் எடுக்கப்படுகிறது, அந்த வகையில் சீனா வருடத்திற்கு 330 டன் தங்கங்களை எடுத்து பிரித்து சந்தைப்படுத்திகிறது, ஆஸ்திரேலியா வருடத்திற்கு 320 டன் தங்கங்களை எடுத்து பிரித்து சந்தைப்படுத்துகிறது, ரஷ்யா 315 டன் தங்கங்களை எடுத்து பிரித்து சந்தைப்படுத்துகிறது.
சரி, தங்கங்களை அதிகமாக சந்தைப்படுத்தும் நாடுகள் இவை என்றால் அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் எது என்றால், அப்பட்டியலில் அமெரிக்கா தான் முதல் இடத்தில் இருக்கிறது, அமெரிக்கா கிட்டத்தட்ட 8133.46 மெட்ரிக் டன் தங்கங்களை கையிருப்பாக வைத்து இருக்கிறதாம். அதற்கு அடுத்தபடியான ஜெர்மனி 3352.65 மெட்ரின் டன் தங்கங்களை கையிருப்பாக வைத்து இருக்கிறதாம்.
மூன்றாவது இடத்தில் இத்தாலி, 2451.84 டன் தங்கங்களை கையிருப்பாக வைத்து இருக்கிறது, நான்காவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் 2,436.88 டன் தங்கங்களை கையிருப்பாக வைத்து இருக்கிறது, ஐந்தாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா 2,332.74 டன் தங்கங்களை கையிருப்பாக வைத்து இருக்கிறது, இப்பட்டியலில் இந்தியா 800.78 மெட்ரிக் டன் தங்க கையிருப்புடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.