Top 3 Countries With Highest Income Per Capita - ஒரு நாட்டில் மதிப்புக்கூட்டப்பட்ட செல்வம் என்பது, அந்த நாட்டின் தனிநபர் வருமானங்களை பொறுத்து அமைகிறது, தனிநபர் வருமானம் என்பது அவர் கையில் சேரக்கூடிய வருமானம், அதாவது வரிகள் எல்லாம் போக அவர் கையிருப்பு வருமானம் என்பதாகும், அந்த வகையில் உலகிலேயே அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதலாவது இருப்பது அமெரிக்கா, இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை என்பது தோராயமாக 335 மில்லியன் இருக்கும், அமெரிக்காவின் GDP என்பது கிட்டத்தட்ட 27.35 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கும் என கூறப்படுகிறது, இங்கு ஒருவரின் தனிநபர் வருமானம் என்பது $58,228.51 ஆக இருக்கிறது, இந்திய மதிப்பில் 50 இலட்சங்களை தாண்டும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது லக்ஸம்பெர்க், இது ஒரு சிறிய ஐரோப்பிய நாடு, இந்த நாட்டின் மக்கள் தொகை என்பது 6,68,610 ஆக இருக்கிறது, லக்ஸம்பெர்க்கின் GDP என்பது கிட்டத்தட்ட 95.84 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கும் என கூறப்படுகிறது, இங்கு ஒருவரின் தனிநபர் வருமானம் என்பது $48,260.27 ஆக இருக்கிறது, இந்திய மதிப்பில் 41 இலட்சங்களை தாண்டும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது ஸ்விட்சர்லாந்து, இந்த நாட்டின் மக்கள் தொகை என்பது 8.8 மில்லியன் ஆக இருக்கிறது, ஸ்விட்சர்லாந்தின் GDP என்பது கிட்டத்தட்ட 822.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கும் என கூறப்படுகிறது, இங்கு ஒருவரின் தனிநபர் வருமானம் என்பது $46,455.47 ஆக இருக்கிறது, இந்திய மதிப்பில் 39 இலட்சங்களை தாண்டும் என கூறப்படுகிறது.