Cost Of Living Indian Cities VS New York - இந்தியாவை விட நியூயார்க் மாகாணத்தில் பிளாட்டுகளின் விலை கம்மி என கூறப்படுகிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Cost Of Living Indian Cities VS New York - சமீபத்தில் இணையத்தில் இந்தியா வெர்சஸ் நியூயார்க் பிளாட்டுகள் என்ற கான்சப்ட் ஒன்று வைரலாகி வருவதை அனைவரும் அறிந்திருக்க முடியும், அதாவது இந்தியாவில் இருக்கும் ஒரு பெருநகரத்தில் மூன்று பெட்ரூம்கள் கொண்ட ஒரு பிளாட்டு 26 கோடியாக இருக்கிறது எனவும், அதுவே நியூயார்க்கில் 4 பெட்ரூம்கள் கொண்ட ஒரு பிளாட்டே 25 கோடி தான் என்பது தான் அந்த தகவல்.
இது இணையத்தில் வைரலாகவே அனைவரும் இந்திய ரியல் எஸ்டேட்காரர்கள் அனைவரும் ஸ்கேமர்கள் என்று அனைவரும் அந்த போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர், உண்மையில் நியூயார்க்கில் பிளாட்டுகள் மலிவாக கிடைக்கிறதா, அப்படி என்றால் இந்தியர்கள் நியூயார்க்கில் குடியேறி விடலாமா என்றால் அதில் என்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்,
சரி, ஒரு இந்தியர் நியூயார்க்கில் சென்று 25 கோடிக்கு உச்சியில் ஒரு பிளாட்டை வாங்கி குடியேறி விட்டார் என வைத்துக் கொள்வோம், சரி வீட்டில் முதலில் சமையலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும், அதன் விலை நியூயார்க்கில் இந்தியாவை விட 71.1 சதவிகிதம் அதிகம், சரி வெளியில் செல்ல டிரான்ஸ்போர்ட் உபயோகிக்க வேண்டும், அதன் விலை நியூயார்க்கில் இந்தியாவை விட 79.1 சதவிகிதம் அதிகம்.
தக்காளி வாங்க வேண்டும் அது நியூயார்க்கில் இந்தியாவை விட 89.9% சதவிகிதம், வெங்காயம் வாங்க வேண்டும் அது நியூயார்க்கில் இந்தியாவை விட 84.9% விலை அதிகம், அரிசி வாங்க வேண்டும், அது நியூயார்க்கில் இந்தியாவை விட 88.9 சதவிகிதம் அதிகம், பால் வாங்க வேண்டும் அது நியூயார்க்கில், இந்தியாவை விட 58.3 சதவிகிதம் அதிகம்,
சரி தண்ணீர் கேன் எடுக்கிறீர்கள், அது நியூயார்க்கில், இந்தியாவை விட 92.8% விலை அதிகம், சிக்கன் எடுக்கிறோம் அது நியூயார்க்கில் இந்தியாவை விட 73% விலை அதிகம், சரி முட்டையாவது வாங்கி சாப்பிடுவோம் என்றால் அது இந்தியாவை விட 77.4% விலை அதிகம், சரி என்னடா இது இவ்வளவு செலவு ஆகுதேன்னு கஸ்டத்துல பீர் அடிக்க போனா அதுவும் இந்தியாவை விட 21.2% விலை அதிகம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் நீங்கள் ஒரு 1 இலட்சத்தில் மாத பட்ஜெட்டை முடிக்கிறீர்கள் என்றால் அதே பட்ஜெட்டை நியூயார்க்கிலும் கேரி பார்வேர்டு செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு 6.5 இலட்சம் ஆவது வேண்டும், இந்தியாவில் வருடத்திற்கு உங்கள் பட்ஜெட் 12 இலட்சம் எனில், அதுவே நியூயார்க்கில் நீங்கள் எளிமையாக வசிப்பதற்கே குறைந்த பட்சம் 40 முதல் 50 இலட்சங்கள் வேண்டும். இப்போது முடிவு செய்து கொள்ளுங்கள், இந்தியா நியூயார்க்கா என்று.