• India
```

அதீத மழையால்...சென்னையில் அத்தியாவசிய பொருள்களின்...விலை தாறுமாறாக உயர்வு...!

Chennai Rains Essential Becomes High

By Ramesh

Published on:  2024-10-15 10:30:06  |    316

Chennai Rain: Essential Becomes High - சென்னையில் பெய்து வரும் கனமழையால் அத்தியாவசிய பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது.

Chennai Rains : Essential Becomes High - நேற்று இரவில் இருந்து தொடர்ந்து சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னையின் இயல்பு நிலை மிகவும் பாதித்து இருக்கிறது, சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் வேறு விடுத்து இருப்பதால் மழை இன்னும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட் அலர்ட் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பெரும்பாலான பகுதிகளில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அப்படி என்றால் நாளை கனம்ழையை சென்னை எப்படி சந்திக்க போகிறது என்று தெரியவில்லை.

அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

கனமழையை அடுத்து கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டிய பெரும்பாலான காய்கறி லாரிகள் வரும் வழிகளிலேயே முடங்கி விட்டதால், கோயம்பேடு சந்தைக்கு வரவிருந்த காய்கறி வரத்து என்பது வெகுவாக குறைந்து இருக்கிறது. இதனால் கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான அத்தியாவசிய காய்கறிகள் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. எல்லா காய்கறியும் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக புகார் எழுந்து இருக்கிறது.



அதிலும் ஒரு சில சில்லறைக் கடைகள் தக்காளி, வெங்காயங்களை எல்லாம் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கின்றனராம், வெண்டைக்காய் எல்லாம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம், அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் ரூபாய் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் சென்னையில் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் பலரும் ஒரு நாளை சமாளிப்பதற்கான பொருள் கூட வாங்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

எச்சரிக்கை

சென்னையின் பெய்து வரும் பெரும் மழையை பயன்படுத்திக் கொண்டு, வியாபாரிகள் விலையை ஏற்றி விற்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து இருக்கிறது, அவ்வாறாக யாரேனும் நிகழ்விலையை விட கூட்டி வைத்து விற்கும் பட்சத்தில், வாடிக்கையாளர்கள் நேரடியாக புகார் செய்யலாம் எனவும் தமிழக அரசு கூறி இருக்கிறது.



" பேரிடர் சூழ்நிலையிலும் சிறிதளவில் கூட மனிதாபிமானம் இல்லாமல் விலையை ஏற்றி விற்கும் ஒரு சில வியாபாரிகளுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன, உங்கள் தெருக்களிலோ, நீங்கள் இருக்கும் பகுதிகளிலோ யாரேனும் விலையை ஏற்றி விற்கும் பட்சத்தில் நீங்கள் இடம், முகவரி உள்ளிட்டவைகளை அளித்து புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவு அளித்து இருக்கிறது "