CBSE NOC Rule Changed - இனிமேல் CBSE பள்ளிகளை துவங்க மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என மத்திய அரசு புதிய சீர்திருத்தம் ஒன்றை செய்து இருக்கிறது.
பொதுவாக கல்வி என்பது இந்திய அரசியல் அமைப்பில் 1976 வரை மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளும் மாநிலப்பட்டியலில் தான் இருந்து வந்தது, ஆனால் 1976 யில் கொண்டு வரப்பட்ட 42 ஆவது சட்டத்திருத்தத்தின்படி கல்வி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முடிவெடுக்கப்படும் பொதுப்பட்டியலில் இணைக்கப்பட்டது.
கல்வி பொதுப்பட்டியலில் இணைக்கப்பட்டதற்கு அன்றே பல வித எதிர்ப்புகள் கிளம்பினாலும் கூட, அன்றைய ஆளும் அரசு எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமல், கல்வி பொதுப்பட்டியலிலேயே இருக்கும்படி திட்டவட்டமாக வழிவகை செய்தது, அதன் விளைவு இன்று மாநிலங்களால் மாநில கல்வி கொள்கைக்கு ஏற்ப ஏதும் முடிவெடுக்க முடியாமல் போனது தான் மிச்சம்.
நீட், புதியகல்விகொள்கை, மும்மொழி கொள்கை என மத்திய அரசு கல்வியில் தினம் தினம் சீர்திருத்தம் செய்து கொண்டே இருக்கிறது, இது மாநில அரசையும் மாநில கல்விகொள்கை மூலம் பயின்று வரும் மாணவர்களையும் வெகுவாக பாதிக்கிறது, இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தால் திட்டங்களை நிதியை நிறுத்தி வைக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் புதிய சீர்திருத்தம் என்ற பெயரில், இனி CBSE பள்ளிகளை துவங்க மாநில அரசிடம் அனுமதி வாங்க வேண்டியதில்லை, யார் வேண்டும் ஆனாலும் CBSE பள்ளிகளை மாநில அரசின் அனுமதி இல்லாமலே துவங்கும் வகையில் ஒரு சீர்த்திருத்தம் ஒன்றை மத்திய அரசு செய்து இருக்கிறது.
" அதாவது இனி சிபிஎஸ்சி பள்ளிகளை துவங்க நினைக்கும் தனியார் நிறுவனங்கள், மாநில அரசிடம் அனுமதிக்கடிதம் வாங்க தேவையில்லை, மத்திய அரசிடம் மட்டும் அனுமதி வாங்கினால் போதுமாம் "