• India

கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ...10 பேர் பலி...1,80,000 மக்கள் வெளியேற்றம்...!

California Wild Fire

By Ramesh

Published on:  2025-01-10 15:40:42  |    74

California Wild Fire - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகவே காட்டுத்தீ ஆனது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது, ஹெலிகாப்டர், தீயணைப்பு வாகனம், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் குழுக்கள் என அனைத்தும் தீயை நோக்கி எதிர்வினை ஆற்றி வரும் நிலையில் எதுவும் பலனளிக்காமல் தீ தொடர்ந்து பரவி வருகிறது.

கிட்டதட்ட இந்த காட்டுத்தீயால் எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் கலிபோர்னியா மாகாணத்தில் 1,80,000 மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர், 35,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பு எரிந்து சாம்பலாகி இருக்கிறது, 9,000 க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் காட்டுத்தீயில் கருகி சாம்பலாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது.



இதுவரை இந்த காட்டுத்தீக்கு கிட்டத்தட்ட 10 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் தெரியாமல் இருக்கிறது, தீ கட்டுக்குள் வந்த பிறகே முழுமையான சேதங்கள் குறித்த அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் ஜூன் மாதத்தில் தான், கலிபோர்னியாவில் காட்டுத்தீ கிட்டத்தட்ட 12,000 ஏக்கர் நிலப்பரப்பை அழித்து சூறையாடியது, அதற்குள் அதுவும் இந்த வருடம் பிறந்து 10 நாள் ஆவதற்குள் மீண்டும் காட்டுத்தீ ஆனது கோர தாண்டவம் ஆடி இருக்கிறது, காலநிலைமாற்றம் மட்டும் இதற்கு காரணம் என்று கூறி விட முடியாது, மனிதர்கள் செய்கின்ற இயல்பான சில தவறுகளும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.