• India
  • April 7, 2025 at 02:05:47 AM
```

14 ஆவது நாளாக...மேலும் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...!

Bomb Threats Day 14 Another 50 Aircraft Affected

By Ramesh

Published on:  2024-10-28 03:33:35  |    220

Bomb Threats: Day 14, Another 50 Aircraft Affected - தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வருவது விமான சேவை நிறுவனங்களுக்கும், இந்திய அரசிற்கும் மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது.

Bomb Threats: Day 14, Another 50 Aircraft Affected - நேற்று 14 ஆவது நாளாக கிட்ட தட்ட 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது, கிட்ட தட்ட 18 இண்டிகோ விமானங்களுக்கும், 17 விஸ்தாரா விமானங்களுக்கும், 15 ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, இந்த மிரட்டல் காரணமாக ஐந்திற்கு மேற்பட்ட விமான நிறுவனங்களின் சேவைகள் முற்றிலுமாக திருப்பி விடப்படட்டன.

இன்னும் ஒரு சில விமானங்கள் முழுமையான சோதனைக்கு பிறகு தாமதமாக புறப்பட்டது, ஒரு சில கனெக்டிங் சேவைகள் தாமதாக புறப்பட்டதால், ஏர் வாடிக்கையாளர்கள் தங்களது அடுத்த விமான பயணத்தை மிஸ் செய்யும் நிலையும் ஏற்பட்டது, விமான நிறுவனங்களின் இந்த இன்னல்களுக்கு அரசு சார்பில் எந்த ஒரு சப்போர்ட்டும் கிடைக்கவில்லை என நிறுவனங்கள் புலம்பி வருகின்றன.


கிட்டதட்ட 14 நாட்களின் மூன்றாயிரம் கோடிக்கும் மேல் விமான சேவைகளில் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது, தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் விமான நிறுவனங்களில் பணு புரியும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது, அரசு மிரட்டல் விடுப்பவர்களை கண்டு பிடித்து இறுக்கினால் மட்டுமே மிரட்டல்கள் குறையும், இல்லையேல் இது மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

" கிட்டதட்ட இந்த 14 நாட்களில் மட்டும் 350 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, புரளிகளை பரப்புவர்களை கண்டு பிடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் மிரட்டல்கள் கேளிக்கைகள் போல் ஆகிவிட்டது, ஆள் ஆளுக்கு சமூக வலைதளங்களில் பேஃக் ஐடிகள் மூலம் மிரட்டல் விடுத்து விமான பாதுகாப்பை கேலி கிண்டல்களுக்கு உள்ளாக்கி விட்டனர் "