Blue Lights Drops Rail Suicide - ஜப்பான் ரயில்வே ஸ்டேசனில் லைட்டிங்கை மாற்றியதன் மூலம், அங்கு நடக்கும் தற்கொலைகள் குறைந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக ரயில்வே ஸ்டேசன்களில் நடக்கும் தற்கொலைகள் என்பது உலகளாவிய அளவில் அதிகரித்து வருகிறது, வளர்ந்த நாடுகளான அமெரிக்காவிலும் கூட வருடத்திற்கு 200 க்கும் மேற்பட்ட ரயில் தற்கொலைகள் பதிவாகிறது, இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல, ரயிலுக்காக காத்து இருக்கும் பயணிகள் திடீர் என்று தன் மனநிலையை உடைத்து ரயில் முன் பாய்ந்து விடுகின்றனர்.
டிக்கெட் எடுத்து விட்டு வண்டிக்காக காத்திருக்க வேண்டிய மனநிலை பல விடயங்களை குழப்பிக் கொண்டு வாழ்வின் நிலையை அந்த காத்திருப்பு நேரம் யோசிக்க வைப்பதால் தான் இத்தகைய தற்கொலைகள் நிகழ்வதாக கூறுகின்றனர், சரி இப்படியானவர்களை அடையாளம் கண்டு இதை தடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே சமயத்தில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று, ஜப்பான் ரயில்வே ஸ்டேசன்களில் இருக்கும் லைட்களை ப்ளுவாக (ஊதா) மாற்றியதன் மூலம் 80 சதவிகிதத்திற்கும் மேல் தற்கொலைகள் குறைந்து இருப்பதாக கூறி இருக்கிறது, அப்படி என்னதான் அந்த ப்ளு லைட்டில் இருக்கிறது என்றால் அது மன அழுத்தத்தை வெகுவாக குறைக்க கூடியதாக அறிவியலார் கூறுகின்றனர்.
ஒருவர் நீண்ட நேரம் ப்ளூ லைட்டின் கீழ் இருக்கும் போது அவரது மன அழுத்தம் வேகமாக குறைவதை ஒரு ஆய்வு உறுதி செய்து இருக்கிறது, அதே பாணியை ஜப்பானியர்கள், ஜப்பான் ரயில்வே ஸ்டேசனில் புகுத்தவே ஜப்பான் ரயில்வே ஸ்டேசன் தற்போது தற்கொலைகள் குறைந்த ரயில்வே ஸ்டேசனாக மாறி இருப்பதை அவர்கள் உறுதி செய்து இருக்கின்றனர்.