Case Against PVR INOX - படம் பார்க்க வந்தவருக்கு, தியேட்டர் அதிக நேரம் விளம்பரம் காட்டியதாக வழக்கு போட்டு ரூ 63,000 ஈடு வாங்கிய பெங்களுரு இளைஞர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் ஒரு விநோதமான சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது, ஒரு 30 வயது இளைஞர் மாலை ஒரு 4:30 மணிக்கு படம் பார்க்க சென்று இருக்கிறார், படம் இரண்டு மணி நேரத்திற்குள் முடிந்து விடும் ஒரு சிறிய படம் என்பதால் எப்படியும் ஒரு 6:30 மணிக்கு வேலைக்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் படத்திற்கு புக் செய்து இருக்கிறார்.
புக் மை ஷோ செயலியின் மூலம் PVR Cinemas, INOX யில் புக் செய்து படம் பார்க்க சென்ற அவருக்கு தியேட்டர் நிர்வாகம் விளம்பரத்தை மட்டும் 25 நிமிடங்களுக்கு மேல் காட்டி இருக்கிறது, விளம்பரம் மட்டும் அல்லாமல் புது படத்தின் ட்ரெயிலர் ஒன்றையும் வெளியிட்டார்களாம், இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் வேலைக்கும் சரியான நேரத்திற்குள் செல்ல முடியவில்லை.
இதனால் கடுப்பான அந்த இளைஞர் தியேட்டரின் மீதும், புக் மை ஷோ செயலியின் மீதும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அதாவது காசு கொடுத்து படம் பார்க்க வந்த என்னை 25 நிமிடம் விளம்பரம் பார்க்க வந்து என் நேரத்தை வீணடித்த தியேட்டரின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
நீதிமன்றமும் வழக்கை விசாரித்து, தியேட்டர் நிர்வாகம் 25 நிமிடம் விளம்பரம் போட்டதை உறுதி செய்தது, பார்வையாளரின் 25 நிமிடம் விளம்பரத்தால் வேஸ்ட் ஆனதையும் உறுதி செய்தபின் தியேட்டர் நிர்வாகத்திற்கு 63,000 ரூபாய் அபராதம் விதித்தது, அந்த 63,000 ரூபாய் படம் பார்க்க வந்த அந்த நபருக்கு ஈடாக கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.