• India
```

வளர்ந்த நாடுகளுக்கு ஹெல்த்தியான பொருள்...ஏழ்மை நாடுகளுக்கு மட்டமான பொருள்...வித்தியாசம் காட்டும் பெப்சி, நெஸ்ட்லே உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள்...!

MNC Selling Less Healthy Product In Developing Countries Says ATNI

By Ramesh

Published on:  2024-11-11 19:09:21  |    191

ATNI Warning - பெப்சி, நெஸ்ட்லே, யூனிலிவர் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இந்தியா மற்றும் ஒரு சில ஏழ்மை நாடுகளில் பாதுகாப்பு குறைந்த ஆரோக்கியமற்ற உணவுகளை சந்தைப்படுத்தி வருவதாக உலகளாவிய தரக்குறியீடு எச்சரித்து இருக்கிறது.

ATNI Warning - உலகம் முழுக்க செயல்பட்டு வரும் பெப்சி, நெஸ்ட்லே, யூனிலிவர் உள்ளிட்ட மல்டி நேஷனல் கம்பெனிகள் வளர்ந்த நாடுகளுக்கு என்று தனியாக ஹெல்த்தியான பொருள்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறதாம்,  அதே சமயத்தில் பெரிதாக உணவுக்கட்டுப்பாடுகள் இல்லாத இந்தியா மற்றும் ஒரு சில ஏழை நாடுகளில் ஆரோக்கியமற்ற இரண்டாம் தர பொருள்களை சந்தைப்படுத்தி வருகிறதாம்.

இலாப நோக்கமற்ற அக்சஸ் டு நியூட்ரிஷன் முன்முயற்சி (Access To Nutrition Initiative) குழு ஒன்று நடத்திய ஆய்வில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் மல்டி நேஷனல் கம்பெனிகள் தயாரித்து வெளியிடும் பொருளுக்கும், இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் ஒரு சில ஏழ்மை நாடுகளில் மல்டி நேஷனல் கம்பெனிகள் தயாரித்து வெளியிடும் பொருளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறதாம்.



அதாவது முழுக்க முழுக்க தரமான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான பொருள்களை முதல் தர நாடுகளுக்கு சப்ளை செய்து விட்டு, இரண்டாம் தரம் கொண்ட பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருள்களை ஏழ்மை நாடுகளுக்கும், வறுமை நாடுகளுக்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பிரபல நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தி வருவது ATNI குழுவால் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.

தரங்களில் பொருள்கள் 5 ஸ்டார்களில் 3.5 இருந்தால் ஆரோக்கியமான பொருளாக கருதப்படும், ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருள்களின் ஸ்டார் அளவீடு என்பது சராசரியாக 2.3, குறைந்தபட்சமாக 1.8 வரை செல்கிறதாம், அதாவது பெரும்பாலான பொருட்கள் ஆரோக்கியமற்றது என குறியீடு செய்து உலக நாடுகளை விழித்துக் கொள்ள எச்சரித்து இருக்கிறது ATNI.