• India
```

ஆனந்த் அம்பானியின் போட்டோக்ராபர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Anant Ambani Photographer | Anant Ambani Wedding Photographer

By Dharani S

Published on:  2024-10-01 13:01:30  |    700

Anant Ambani Photographer -தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண போட்டோக்ராபரின் ஒருநாள் சம்பளம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வருகிற ஜூலை மாதம் 12 ஆம் நடைபெற்றது. முதற் கட்ட விழாவானது மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் நிகழ்ந்தது. அதையடுத்து இரண்டாம் கட்ட விழாவானது மே 28 முதல் 30 வரை சொகுசு கப்பலில் நடைபெற்றது. கப்பல் பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வை படம் எடுத்த ஒளிப்பதிவாளரின் (Camera Man) ஒரு நாள் சம்பளம் வெளியாகியுள்ளது. ஜோசப் ராதிக் ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார், அவர் பிரபலங்களின் திருமணங்களை புகைப்படம் எடுப்பதில் மிகவும் பிரபல்யமானவர். திருமணத்தின் போது புகைப்படக் கலைஞர் ஜோசப் ராதிக்கி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டார்.

இவர் கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷல், விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா, சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி மற்றும் கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி உள்ளிட்டோரின் திருமண புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார். இவர் ஒரு நாளைக்கு ரூ. 1,25,000 - ரூ. 1,50,000 வரை சம்பளம் வாங்கினார். அவர் தனது புகைப்படக் கட்டணத்துடன் கூடுதலாக பயணம் மற்றும் தங்கும் கட்டணத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.