Ambani And Adani Exit From 100B USD Club - ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமையான முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைமையான கவுதம் அதானி என இருவருக்கும் இந்த 2024 நிதி ஆண்டு பெரும் இழப்பை கொடுத்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வருடத்தின் இறுதி முடிவதற்குள் அம்பானி மற்றும் அதானி என இருவரும், ப்ளும்பர்க் ’100 பில்லியன் USD Club’ யில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்புகள், சில்லறை வணிகத்தில் எடுத்த ஒரு சில தவறான முடிவுகள், இது போக பெருகிய வங்கிக் கடன்கள் என இந்த மூன்று காரணிகள் தான் ரிலையன்ஸ் நிறுவனம், இந்த நிதி ஆண்டில் சற்றே சரிந்து போனதற்கான காரணமாக கூறப்படுகிறது, டிசம்பர் 17 நிலவரப்படி முகேஷ் அம்பானி அவர்களின் நிகர சொத்து மதிப்பு 96.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.
அதே சமயத்தில் கவுதம் அதானி விஷயத்தின் முதலீடுகளில் ஏற்பட்ட குழப்பங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களில் சரியான கவனம் செலுத்தாமை, பங்குச்சந்தை மோசடிகள், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு என இவை எல்லாம் அதானியின் சொத்துக்களை 40 பில்லியன் டாலர் அளவிற்கு சரித்தன, தற்போது அதானியின் நிகர சொத்து மதிப்பு 80.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.
ப்ளும்பர்க் 100 பில்லியன் USD பில்லியனர்கள் பட்டியலில் இரண்டே இரண்டு இந்தியர்கள் தான் இருந்த நிலையில், அந்த இரண்டு இந்திய பில்லியனர்களும் அப்பட்டியலில் இருந்து வெளியேறி இருப்பது, அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது, அடுத்த ஆண்டு புதிய திட்டங்களை வகுத்து அம்பானி மற்றும் அதானி என இருவரும் மீண்டும் அந்த பட்டியலில் இடம்பிடிப்பார்கள் என நம்புவோம்.