Trump Wins: Elon Musk Net Worth Huge Surge - அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 26 பில்லியன் டாலர்கள் உயர்ந்து இருக்கிறது.
Trump Wins: Elon Musk Net Worth Huge Surge - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒட்டு மொத்த 538 எலக்டோரல் ஓட்டுகளில், டொனால்டு டிரம்ப் 277 இடங்களை கைப்பற்றி வெள்ளைமாளிகையை மீண்டும் தன்வசப்படுத்தி இருக்கிறார், எதிர்த்து போட்டி இட்ட கமலா ஹாரிஸ் 3.5 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறார், பெரிய பெரிய தலைவர்கள், ஹாலிவுட் ஹீரோக்கள் சப்போர்ட் இருந்தும் கமலா ஹாரிஸ் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கிறார்.
டிரம்ப் வெற்றியால் சீனா உட்பட பல நாடுகள் கதிகலங்கி நிற்கும் நிலையில், ஒரே ஒருவர் மட்டும் மிக மிக சந்தோசமாக இருக்கிறார் போல, அவர் வேறு யாரும் இல்லை, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை எலான் மஸ்க் தான், டிரம்ப் வெற்றிக்கு பிறகு எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு கிட்டதட்ட 26 பில்லியன் டாலர்கள் உயர்ந்து இருக்கிறது.
தற்போது எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 290 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது, இதற்கு காரணம் என்ன என்று நோக்கிய போது, முதலீட்டாளர்கள் முன்னதாகவே டிரம்ப்பின் வெற்றி குறித்து தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு, அதற்கு ஏற்றார் போல முதலீடு செய்தனர், இதனால் சர்வதேச சந்தையில் டாலர்கள் மற்றும் பிட்காயின்கள் அதிக வலிமையையும், அதிக மதிப்பையும் பெற்றன,
இதனால் யார் பயனடைந்தார்களோ இல்லையோ ஆனால் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்குகள் மிகவும் பயனடைந்தன, டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதன் விளைவு எலான் மஸ்க்கின் நிகர சொத்துக்களில் ஒரு 26 பில்லியன் டாலர்கள் உயர்ந்து இருக்கிறது, எலான் மஸ்க்கின் சொத்துக்கள் மீண்டும் யாரும் எட்டி பிடிக்க முடியாத உயரத்திற்கு சென்று இருக்கிறது.