AGEL Withdraws Power Projects In Sri Lanka - இலங்கை காற்றாலை திட்டத்தில் இருந்து அதானி க்ரீன் குழுமம் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி க்ரீன் குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கதக்க ஆற்றலை மேற்கொள்ளும் நிறுவனங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது, கடந்த 2015 யில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அதானி க்ரீன் குழுமம் 11 மாநிலங்களிலும் ஒரு சில வெளிநாடுகளிலும் 50 க்கும் மேற்பட்ட பிராஜக்டுகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கையில் 442 மில்லியன் டாலர் மதிப்பிலான காற்றாலை திட்டத்திற்கு அதானி க்ரீன் குழுமம் ஒப்புதல் பெற்று இருந்தது, அனைத்து விதமான பேச்சு வார்த்தைகளும் முடிந்தாலும் கூட, ஒரு சில சட்ட சிக்கல்களும், சுற்றுச் சூழல் அனுமதி வாங்குவதிலும் அதானி க்ரீன் குழுமம் பின் தங்கி நின்றது.
இத்திட்டத்தின் முன்கள பணிகளுக்காக அதானி குழுமம் இதுவரை 5 மில்லியன் டாலர் செலவிட்டு இருப்பதாக தெரிகிறது, அது மட்டும் அல்லாமல் 14 கட்டமாக அதானி க்ரீன் குழுமத்திற்கு இலங்கை மின் வாரியத்திற்கும் இடையில் பேச்சு வார்த்தையும் நடைபெற்று இருக்கிறது, ஆனால் எல்லா ஒப்புதலும் கிடைத்தால் கூட சட்ட சிக்கல்களும் சுற்று சூழல் பிரச்சினைகளும் தடையாக முன் வந்து நின்றன.
அதானி குழுமமும் 2 வருடங்களுக்கு மேலாக இந்த காற்றாலை ப்ராஜக்டுகளுக்காக தொடர்ந்து காத்திருந்தது, ஆனால் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இந்த கட்டமைப்பில் இருந்து முழுவதும் விலகுவதாக அறிவித்து இருக்கிறது, எதிர்காலத்தில் வாய்ப்புகள் கிடைத்தால் மீண்டும் இலங்கையோடு பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் எனவும் கருத்து தெரிவித்து இருக்கிறது.