Significant Surge In Search Of How To Leave USA - அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பின்னர், அமெரிக்கர்கள் அதிகமாக, ’அமெரிக்காவை விட்டு எப்படி வெளியேறுவது?’ என கூகுளில் தேடி இருப்பது சர்ச்சையாகி வருகிறது.
Significant Surge In Search Of How To Leave USA - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒட்டு மொத்த 538 எலக்டோரல் ஓட்டுகளில், டொனால்டு டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்று வெள்ளைமாளிகையை மீண்டும் கைப்பற்றி இருக்கிறார், எதிர்த்து போட்டி இட்ட கமலா ஹாரிஸ் 3.5 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறார், பெரிய பெரிய தலைவர்கள், ஹாலிவுட் ஹீரோக்கள் சப்போர்ட் இருந்தும் கமலா ஹாரிஸ் தேர்தலில் தோல்வியை தழுவி இருக்கிறார்.
ட்ரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து உலக நாடுகள் தான் புலம்பி வருகிறது என்றால், அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்கர்களும் புலம்பி தான் வருகின்றனர், ட்ரம்ப் கொஞ்சம் அதிரடியாக நடவடிக்கை எடுக்க கூடியவர் என்றாலும் கூட அவ்வப்போது எதையாவது செய்து எதையாவது பேசி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார், அவர் எடுக்கும் நடவடிக்கைகல் சில சமயம் அமெரிக்கர்களுக்கே பாதகமாகி விடும்.
இது போக பதவி ஏற்றதும், பிறநாட்டவர்கள் இனி அமெரிக்காவில் வந்து குழந்தைகள் பெற்றால் அந்த குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய இருக்கிறாராம், இது அமெரிக்காவில் பணி புரிந்து வரும் பிறநாட்டவர்களை கொந்தளிப்படைய செய்து இருக்கிறது, இந்த முடிவால் இலட்சக்கணக்கில் இந்தியர்களும் பாதிக்கப்பட இருப்பதாக தகவல்.
இந்த நிலையில் தான் அமெரிக்கர்கள் கூகுளில் ’அமெரிக்காவை விட்டு எப்படி வெளியேறுவது’ என அதிகமாக தேடி இருக்கின்றனர், வழக்கமாக இந்த கீவேர்டு கூகுளில் தேடலில் இருந்தாலும் கூட, ட்ரம்ப்பின் வெற்றிக்கு பிறகு இந்த கீவேர்டை தேடுபவர்கள் 1503% அதிகரித்து இருக்கிறதாம், இதில் இருந்து அமெரிக்கர்களே அமெரிக்காவை விட்டு வெளியேற துடிப்பது அம்பலம் ஆகி இருக்கிறது.