• India
```

அதானி குழுமம் அமெரிக்க வழக்கில் இருந்து விடுவிப்பு...மீண்டும் பங்குச்சந்தைகளில் ஏற்றம் கண்ட அதானி குழுமத்தின் முதலீடுகள்...!

Adani Group Acquitted From US Lawsuit

By Ramesh

Published on:  2024-11-28 16:33:43  |    217

Adani Group Acquitted From US Lawsuit - அதானி குழுமம் அமெரிக்க வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Adani Group Acquitted From US Lawsuit - கடந்த சில தினங்களுக்கு முன்பு அதானி குழுமத்தின், அதானி க்ரீன் எனர்ஜி மீது அமெரிக்க நீதிமன்றத்தின் ஒரு ஊழல் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது, அதாவது அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு என்பது, சூரிய மின் சக்தி பிராஜக்டுகளை, இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அனைத்து ஒப்பந்தங்களையும் முழுமையாக அதானி குழுமம் பெற்றுக் கொண்டதாம்.

மேலும் அதன் மூலம் பல அந்நிய முதலீடுகளை அதானி குழுமம் அதிகமாக கைப்பற்றியதாகவும் புகார், பல அமெரிக்க முதலீட்டாளர்களும் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்து இருப்பதால் அமெரிக்க நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது, இந்த குற்றச்சாட்டு வெளியானதுமே அதானி குழுமம் மற்றும் அதன் பங்குகள் பங்குச்சந்தைகளில் வெகுவாக சரிய ஆரம்பித்தன.



கிட்டதட்ட இரண்டு மூன்று நாட்களில் 8 இலட்சம் கோடிகளுக்கு மேல் பங்குச்சந்தையில் இழப்பு ஏற்பட்டது, அதானி குழுமத்தின் நிகர வருமானமும் கிட்டதட்ட ஒரு இலட்சம் கோடிகளுக்கு மேல் சரிந்தது, இந்த சரிவுகளால் போர்ப்ஃஸ் உலகளாவிய நிகழ்கால பணக்காரர்கள் பட்டியலில் 22 ஆவது இடத்தில் இருந்து வந்த கவுதம் அதானி மூன்று இடம் சரிந்து 25 ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டார், 

இந்த நிலையில் அதானி குழுமம் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில், அதானி க்ரீன் எனர்ஜி குழுமம் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது, முறைகேடுகள் ஏதேனும் நடந்திருப்பின் அது இந்திய அரசு விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் கூறி இருக்கின்றனர், இதனால் மீண்டும் அதானி குழுமத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் மீண்டும் உயர ஆரம்பித்து இருக்கிறது.

" வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதுமே, அது பங்குச்சந்தையில் எதிரொலித்து நேற்று ஒரே நாளில் அதானி எண்டர்பிரைசஸ்சின் பங்குகள் 11 மடங்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது "