• India
```

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி..அதானி குழுமத்தின் மின் ஒப்பந்தத்தை...ரத்து செய்த கென்ய அரசு...!

Kenya Cancelled All Adani Deals

By Ramesh

Published on:  2024-11-22 16:56:35  |    468

Kenya Cancelled All Adani Deals - அதானி குழுமத்தின் மீது விழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டால், கென்ய அரசு அதானி குழுமத்துடன் ஆன மின் ஒப்பந்தத்தை ரத்து செய்து இருக்கிறது.

Kenya Cancelled All Adani Deals - அதானி குழுமத்தின் அடுக்கடுக்காக விழுந்து இருக்கும் குற்றச்சாட்டுகளால், கவுதம் அதானி கிட்டதட்ட ஸ்தம்பித்து இருக்கிறார், நேற்று ஒரே நாளில் அதானி குழுமம் தனது நிகர சொத்தில் 10 இலட்சம் டாலர்கள் இழப்பை சந்தித்து இருக்கிறது, இந்திய மதிப்பில் கிட்டதட்ட அது 89,000 கோடியை நெருங்கும், பங்குச்சந்தையிலும் அதானி குழுமத்தின் பங்குகள் 22% சரிந்து இருக்கின்றன.

நேற்று ஒரே நாளில் அதானியின் மீதான குற்றச்சாட்டால் இந்திய பங்குச்சந்தையில் 2 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல், அதாவது அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு என்பது, சூரிய மின் சக்தி பிராஜக்டுகளை, இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அனைத்து ஒப்பந்தங்களையும் முழுமையாக பெற்றுக் கொண்டு அதிகாரிகளை சட்டங்களை தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க கூறி இருக்கின்றனராம்.



மேலும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் பல கோடி கணக்கில் வெளிநாட்டு முதலீடுகளையும் அதானி குழுமம் பெற்று இருக்கிறது, முக்கியமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் பலவும் அதானி குழுமத்தில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்து இருக்கின்றனராம், இந்த ஊழல் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தாலும் அமெரிக்கா திட்டவட்டமாக ஆதாரங்கள் இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறது.

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளால் அதானி குழுமம் மட்டும் அல்லாமல், பல இந்திய, அயல்நாட்டு முதலீட்டாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர், இது போக கென்ய அரசு அதானி குழுமத்துடன் போட்டு வைத்து இருந்த மின் ஒப்பந்தத்தையும் கென்ய அரசு ரத்து செய்து இருக்கிறது, இந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதானி குழுமம் இன்னும் சரிய வாய்ப்பு இருப்பதாக தகவல்