Sleep Champion Bangalore -என்னப்பா இது, தூங்குறதுக்கெல்லாம் போட்டியா என்றால், ஆம் தூங்குவதற்கு தான் இந்த போட்டி, வேக் பிட் நிறுவனம் நடத்திய இந்த ஸ்லீப்பிங் போட்டியில் தூங்கியே ஒருவர் சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, 9 இலட்சம் பரிசுத் தொகையையும் தட்டி சென்று இருக்கிறார்.
ஓடிக்கொண்டே இருக்கும் உலகத்தில், தற்போதெல்லாம் தூக்கம் என்பது என்றால் என்ன என கேட்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது, அலைத்து களைத்த ஒருவருக்கு ஐந்து மணி நேர தூக்கம் கிடைப்பதே இப்போதெல்லாம் அரிது, யாருக்காக எதற்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம் என தெரியாமலே பலரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள், இவ்வளவு ஓடுவது எதை அடைவதற்காக என்பது தான் அவர்களுக்கே தெரியாத ஒன்றாக இருக்கிறது.
ஒரு உடல் சமநிலையாக இருக்க வேண்டும் எனில், தூக்கம் என்பது மிக மிக அவசியம், தூக்கம் இன்மை என்பது உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்த வல்லது, ஒருவர் குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஆவது ஒரு ஆழ்ந்த தூக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இங்கு பலருக்கும் இருக்கும் 40 சதவிகித உடல் கோளாறுகள் தூக்கமின்மையால் ஏற்படுவது தானாம்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால், இங்கு 50 சதவிகித மக்கள், ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த உறக்கத்தை எடுத்துக் கொள்வது இல்லையாம், தூக்கத்திலேயே பல நினைவுகளோடு பயணிக்கிறார்களாம், தூக்கத்தில் ஏதாவது நினைவு தெரிந்து கொண்டே இருந்தால், நீங்கள் தூங்குவது என்பது தூக்கம் இல்லையாம், இதிலேயே தெரிந்து இருக்கும் ஒருவருக்கு தூக்கம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று!
இந்த நிலையில் தான் வேக் பிட் என்ற நிறுவனம், தூக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுருத்தி ஸ்லீப்பிங் போட்டி ஒன்றை நடத்தியது, இது இந்த நிறுவனம் நடத்தும் மூன்றாவது எடிசனாம், இதற்கு முன்பே இரண்டு எடிசன்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறதாம், மூன்றாம் எடிசனில் கலந்து கொண்ட அந்த 12 பேர், இதை போட்டி என்பதை விட ஸ்லீப்பிங் பயிற்சி என சொல்லலாம் என்கின்றனர். ஒருவர் எந்த வித இடையூறும் இல்லாமல் எப்படி 8-9 மணி நேரம் தூங்குவது என இந்த போட்டி அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததாம்.
12 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில், பெங்களூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் சாயீஸ்வாரி பாட்டில், தூங்கி தூங்கியே, ஸ்லீப்பிங் சாம்பியன் என்ற பட்டத்தை வென்று பரிசுத் தொகை 9 இலட்சங்களையும் தட்டி சென்று இருக்கிறாராம், தூக்கம் என்பது வாழ்வில் எவ்வளவு பெரிய விடயம் என்பதை நான் இங்கு வந்து தான் கற்றுக்கொண்டேன் என சாயீஸ்வாரி பாட்டில் பட்டத்தை வென்ற பின் நிரூபர்களிடம் கூறி இருக்கிறார் .