Salary Hike-அடுத்த வருடம் உற்பத்தி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் ஊதிய உயர்வும், நிதி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 9.9 சதவிகிதமும் ஊதிய உயர்வு இருக்கும் என ஒரு அறிக்கை கூறி இருக்கிறது.
அடுத்த ஆண்டில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
முப்பதாவது வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பிசினஸ் சர்வே நடத்திய ஒரு சர்வேயில் அடுத்த வருடம் தனியார் மற்றும் கார்பரேட்களுக்கு சொந்தமான உற்பத்தி மற்றும் நிதி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கிட்ட தட்ட 10 சதவிகிதம் சம்பள உயர்வு இருக்கும் என கூறி இருக்கிறது. கிட்ட தட்ட 1,176 நிறுவனங்கள், 40 தொழில் துறைகளில் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் இந்த முடிவு கிடைத்து இருக்கிறதாம்.
இந்த முடிவின் படி இஞ்சினியரிங், உற்பத்தி துறை, சில்லறை வணிக நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் வரையில் ஊதிய உயர்வு கிட்டுமாம், நிதி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 9.9 சதவிகிதம் வரையில் ஊதிய உயர்வு கிட்டுமாம், உலகளாவிய திறன் மையங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 9.9 சதவிகிதம் ஊதிய உயர்வு கிட்டுமாம்.
தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் தளங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 9.3 சதவிகிதம் ஊதிய உயர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் இதர சேவை துறையில் பணியாற்றுபவர்களுக்கு 8.1 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு இருக்கலாம் எனப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் அந்தந்த நிறுவனங்களால் வெளியிடப்படும் என அந்த சர்வேயின் அறிக்கை கூறுகிறது.
வேலை இழப்பு விகிதம் குறையும்!
முப்பதாவது வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பிசினஸ் சர்வே கொடுத்த அறிக்கையின் படி அடுத்த ஆண்டு தேசத்தில் வேலை இழப்பு விகிதம் வெகுவாக குறையுமாம், 2022 காலக்கட்டத்தில் வேலை இழப்பு விகிதம் 21.4 சதவிகிதமாக இருந்தது, 2023-யில் இந்த வேலை இழப்பு விகிதம் 18.7 சதவிகிதமாக குறைந்தது, தற்போது 2024 யில் இந்த வேலை இழப்பு விகிதம் 16.9 சதவிகிதமாக இருக்கிறது, அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த வேலை இழப்பு விகிதம் என்பது வெகுவாக குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.